சிடிபிகோனைட்டு

பைரோகுளோர், ஆக்சைடு கனிமம்

சிடிபிகோனைட்டு (Stibiconite) என்பது Sb3O6(OH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஆண்டிமனி ஆக்சைடு கனிமம் ஆகும். கிரேக்க மொழியில் சிடிபி என்ற சொல் ஆண்டிமனியையும் கோனிசு என்ற சொல் தூள் என்ற பொருளையும் குறிக்கின்றன. எனவே கனிமத்தின் பகுதிக்கூறுகளையும் அதன் இயல்பையும் மறைமுகமாகத் தெரிவிக்கும் வகையில் சிடிபிகோனைட்டு என்ற பெயர் வைக்கப்பட்டது. பைரோகுளோர் சிறப்புக் கனிமக் குழுவில் சிடிபிகோனைட்டு ஓர் உறுப்பினராகும் [1][2][3]. பன்னாட்டு கனிமவியல் சங்கம் சிடிபிகோனைட்டு கனிமத்தை Sbc[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

சிடிபிகோனைட்டு
Stibiconite
பொதுவானாவை
வகைஆக்சைடு கனிமம்
வேதி வாய்பாடுSb3+Sb5+2O6(OH)
இனங்காணல்
மோலார் நிறை478.25 கி/மோல்
நிறம்வெளிர் மஞ்சள் முதல் வெண் மஞ்சள் வரை, வெண் சிவப்பு, ஆரஞ்சு; சாம்பல், பழுப்பு, மாசு நிலையில் கருப்பு
படிக இயல்புதூள், பேரளவு, திராட்சைக் கொத்து, செதிற்படிவுகள்
படிக அமைப்புசமவச்சு கனசதுரம்
பிளப்புஇல்லை
முறிவுகளிமண் போன்றது
மோவின் அளவுகோல் வலிமை4-5
மிளிர்வுபளபளப்பு - மங்கல்
கீற்றுவண்ணம்இள மஞ்சள்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும் மற்றும் கசியும்
ஒப்படர்த்தி4.1 - 5.8, சராசரி = 4.94
ஒளியியல் பண்புகள்சமவச்சு
ஒளிவிலகல் எண்n=1.6-1.97
மேற்கோள்கள்[1][2][3]

தோற்றம்

தொகு

1862 ஆம் ஆண்டு செருமனி நாட்டின் பவேரியா, பிரான்கோனியா மண்டலங்களில் முதன்முதலாக சிடிபிகோனைட்டு கண்டறியப்பட்டது [2].

சிடிப்னைட்டு போன்ற பிற நீர்வெப்ப ஆண்டிமனி தாதுக்களின் இரண்டாம் நிலை மாற்ற கனிமமாக சிடிபிகோனைட்டு தோன்றுகிறது. செர்வாண்டைட், வேலண்டைனைட், கெர்மைசைட், ஆண்டிமனி மற்றும் சிடிப்னைட்டு போன்ற கனிமங்களுடன் இணைந்து காணப்படுகிறது [3].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Stibiconite". Webminerals. பார்க்கப்பட்ட நாள் 2009-06-06.
  2. 2.0 2.1 2.2 "Stibiconite". Mindat. பார்க்கப்பட்ட நாள் 2009-06-06.
  3. 3.0 3.1 3.2 Handbook of Mineralogy
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிடிபிகோனைட்டு&oldid=4142882" இலிருந்து மீள்விக்கப்பட்டது