சிடேசைட்டு

சிடேசைட்டு (Steacyite) என்பது Kமாறி(Ca,Na)2(Th,U)Si8O20 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். தோரியத்தையும் யுரேனியத்தையும் கொண்டுள்ள ஓர் ஒருங்கிணைவு சிலிக்கேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. சிறிய பழுப்பு அல்லது மஞ்சள் பச்சை படிகங்களாக சிடேசைட்டு உருவாக்குகிறது. பெரும்பாலும் சிலுவை இரட்டை படிகங்களாக காணப்படுகிறது. கதிரியக்கப் பண்பைக் கொண்டுள்ளது. 1982 ஆம் ஆண்டில் கியூபெக்கில் உள்ள செயிண்ட் இலேர் மலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கனிமவியலாளர் அரோல்ட் ராபர்ட் சிடேசி (1923-2012) நினைவாக கனிமத்திற்கு சிடேசைட்டு என்று பெயரிடப்பட்டது.

சிடேசைட்டு
Steacyite
கியூபெக்கில் கிடைத்த சிடேசைட்டு படிகங்கள்
பொதுவானாவை
வகைவளையசிலிக்கேட்டு
வேதி வாய்பாடுKமாறி(Ca,Na)2(Th,U)Si8O20
இனங்காணல்
நிறம்சாம்பல், அடர் பழுப்பு, பச்சை, பழுப்பு
படிக அமைப்புநாற்கோணம்
மோவின் அளவுகோல் வலிமை5
மிளிர்வுபளபளக்கும், உயவுத்தன்மை, மங்கல்
ஒளிஊடுருவும் தன்மைஒளி கசியும், ஒளிபுகாது
பிற சிறப்பியல்புகள் Radioactive

பன்னாட்டு கனிமவியல் சங்கம் சிடேசைட்டு கனிமத்தை Scy[1] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிடேசைட்டு&oldid=4135157" இலிருந்து மீள்விக்கப்பட்டது