சிடைபையோபலேடினைட்டு
ஆண்டிமோனைடு கனிமம்
சிடைபையோபலேடினைட்டு (Stibiopalladinite) என்பது Pd5Sb2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இக்கனிமத்தில் பலேடியம், ஆண்டிமனி போன்ற தனிமங்கள் காணப்படுகின்றன [1]. வெள்ளியைப் போன்ற வெண்மை நிறம் மற்றும் வெள்ளியைப் போன்ற சாம்பல் நிறங்களில் ஒளிபுகா கனிமமாக இது அறுகோண படிகத் திட்டத்தில் படிகமாகிறது [2].
சிடைபையோபலேடினைட்டு Stibiopalladinite | |
---|---|
சிடைபையோபலேடினைட்டு (உலோகத்தன்மை, மையம், கீழே) | |
பொதுவானாவை | |
வகை | சல்பைடு கனிமம் |
வேதி வாய்பாடு | Pd5Sb2 |
இனங்காணல் | |
நிறம் | வெள்ளியை போன்ற வெண்மையும் சாம்பலும் |
படிக அமைப்பு | அறுகோணப் படிகத்திட்டம் |
மோவின் அளவுகோல் வலிமை | 4 - 5 |
மிளிர்வு | உலோகத்தன்மை |
கீற்றுவண்ணம் | கருப்பு |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் சிடைபையோபலேடினைட்டு கனிமத்தை Stpdn[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
தென் ஆப்பிரிக்காவின் புசுவெல்டு தீப்பாறைத் தொகுதியில் இக்கனிமம் தோற்றம் பெற்றதாக 1929 ஆம் ஆண்டு முதன்முதலாக விவரிக்கப்பட்டது [4].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Handbook of Mineralogy - Stibiopalladinite" (PDF). Handbookofmineralogy.com. Archived from the original (PDF) on 2013-06-02. பார்க்கப்பட்ட நாள் 2013-10-18.
- ↑ "Stibiopalladinite: Stibiopalladinite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2013-10-18.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ "Stibiopalladinite Mineral Data". Webmineral.com. பார்க்கப்பட்ட நாள் 2013-10-18.
உசாத்துணை
தொகு- Emsley, John. Nature's Building Blocks. Oxford, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-850341-5