சித்திரகாரன் முரளி
சித்திரகாரன் முரளி ( Chithrakaran Murali ) அல்லது முரளி. டி எனவும் அறியப்படும் இவர் இந்திய மாநிலமான கேரளாவின் கண்ணூர் நகரத்தைச் சேர்ந்த ஓர் ஓவியராராவார். இவரது ஓவியங்கள் தெளிவற்ற, மறைக்கப்பட்ட, வரலாற்று உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதற்கான ஒரு அரசியல் வெளிப்பாடு ஆகும். முக்கிய வரலாற்று பாரம்பரியத்தில் புறக்கணிக்கப்பட்ட மறுமலர்ச்சி இயக்கங்களின் சாரத்தை முரளி தனது ஓவியங்களில் படம்பிடித்துள்ளார். மேலும் இவரது படைப்புகளில் ஒன்று கற்பனையான நாட்டுப்புறக் கதையான நங்கேலியை அடிப்படையாகக் கொண்டது. முரளியின் பணியை பிபிசி உள்ளிட்ட செய்தி ஊடகங்கள் அங்கீகரித்துள்ளன.[1] [2] [3]
சித்திரகாரன் முரளி | |
---|---|
இவர் திருவனந்தபுரம் நுண்கலை கல்லூரியில் ஓவியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். கேரளா முழுவதும் மறுமலர்ச்சி விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ஓவியங்களின் கண்காட்சிகளை நடத்தி வருகிறார்.[4]
சர்ச்சை பதிவு
தொகுஆத்மகதங்கள்' என்ற வலைப்பதிவில் முரளியின் பதிவில் ஆபாசமான உள்ளடக்கம் இருப்பதாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முரளி கண்ணூர் நகரக் காவல் நிலையத்தில் மூன்கூட்டியே பிணை ஆணை கேட்டு மனு தாக்கல் செய்தார். இணையம் மற்றும் திறன்பேசி தொடர்பான குற்றங்களின் விசாரணையைக் கையாளும் மாநில சைபர் செல் இந்த புகாரை மேலதிக விசாரணைக்காக காவல்துறைக்கு அனுப்பியுள்ளது. சிலர் வலைப்பதிவில் கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படையாக ஆதரிக்கின்றனர்.[5]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "ചിത്രങ്ങളിലൂടെ ലോകമാധ്യമങ്ങളിൽ ചർച്ചയായി നങ്ങേലിയും 'മുലക്കര'വും". Mathrubhumi online. 2 August 2016 இம் மூலத்தில் இருந்து 25 June 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170625023648/http://www.mathrubhumi.com/print-edition/kerala/kannur-bbc-malayalam-news-1.1247340.
- ↑ "The woman who cut off her breasts to protest a tax". BBC News. 28 July 2016 இம் மூலத்தில் இருந்து 21 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171021014132/http://www.bbc.co.uk/news/world-asia-india-36891356.
- ↑ "She died fighting 'breast tax', her name lives on - Times of India". Times of India. 7 March 2016 இம் மூலத்தில் இருந்து 23 August 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170823021521/http://timesofindia.indiatimes.com//city/chennai/She-died-fighting-breast-tax-her-name-lives-on/articleshow/51283819.cms.
- ↑ "She died fighting 'breast tax', her name lives on - Times of India". Times of India. 7 March 2016 இம் மூலத்தில் இருந்து 2017-08-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170823021521/http://timesofindia.indiatimes.com//city/chennai/She-died-fighting-breast-tax-her-name-lives-on/articleshow/51283819.cms.
- ↑ "Case registered against Malayalam Blogosphere". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-07-20.