சித்தும்போ முவாலி

சாம்பிய சதுரங்க வீரர்

சித்தும்போ முவாலி (Chitumbo Mwali) சாம்பியா நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க விளையாட்டு வீரராவார். 2007 ஆம் ஆண்டு இவருக்கு பன்னாட்டு சதுரங்க மாசுட்டர் பட்டம் வழங்கப்பட்டது.

சித்தும்பா முவாலி
Chitumbo Mwali
நாடுசாம்பியா
பிறப்புஏப்ரல் 11, 1986 (1986-04-11) (அகவை 38)
பட்டம்பன்னாட்டு மாசுட்டர் (2007)
உச்சத் தரவுகோள்2356 (சூலை 2017)

சதுரங்க வாழ்க்கை

தொகு

2006 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க இளையோர் சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்று வெற்றியாளரானார். 2007 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்கா அளவில் நடைபெற்ற ஆப்பிரிக்க விளையாட்டுப் போட்டிகளில் நான்காவது பலகையில் விளையாடி முவாலி வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.[1]

2021 ஆம் ஆண்டு சாம்பியன் சதுரங்க உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் வென்ற பிறகு, இவர் 2021 சதுரங்க உலகக் கோப்பையில் விளையாடத் தகுதி பெற்றார். இரண்டு சுற்றுகள் மற்றும் ஒரு ஆட்டம் கைவசம் இருந்த நிலையில் 1.5 புள்ளிகள் பின்தங்கி இருந்த நிலையில் எதிராகப் போட்டியிட்ட சாம்பிய சதுரங்க வீரர் ஆண்ட்ரூ கயோண்டே, ஒரு சர்ச்சை காரணமாக போட்டியை விட்டு வெளியேறினார்.[2][3]

உலகக் கோப்பையின் முதல் சுற்றில், அதிக புள்ளிகளுடன் விளையாடிய ஐக் எம். மார்டிரோசுயனுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சித்தும்போ முவாலி தோல்வியடைந்தார். இரண்டாவது போட்டியில் முவாலி வெற்றிபெற்றார். இதனால் போட்டி சமநிலை முடிவை எட்டியது. சமநிலை முறிவு போட்டிகளில் முவாலி 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடிக்கப்பட்டார்.

முவாலி 2023 சதுரங்க உலகக் கோப்பையில் போட்டியிட சாம்பியன் நாட்டு தகுதிச் சுற்று போட்டிகளை வென்றார் [4], இங்கு அவர் முதல் சுற்றில் துருக்கி நாட்டைச் சேர்ந்த சதுரங்க வீரர் முசுதபா இல்மாசால் தோற்கடிக்கப்பட்டார்.

முவாலி கணக்காளராகவும் சதுரங்க பயிற்சியாளராகவும் உள்ளார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "OlimpBase :: 9th All-Africa Games (chess - men), Algiers 2007, individual results". www.olimpbase.org. பார்க்கப்பட்ட நாள் 2021-06-12.
  2. "IM Andrew Kayonde Pulls Out – IM Chitumbo Mwali Goes to World Cup – Zone 4.5 Chess" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-12.
  3. "Top Six 2021 World Cup Qualifier". Chess-Results Server. பார்க்கப்பட்ட நாள் 2022-09-01.
  4. "Chess-Results Server Chess-results.com - FIDE World Cup Slot (Team Zambia)". chess-results.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-01.
  5. Mubayiwa, Tendai (2014-12-03). "Chess interview with Zambia's International Master Chitumbo Mwali". Africa Chess (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-12.

புற இணைப்புகள்

தொகு
  • Chitumbo Mwali rating card at FIDE
  • Chitumbo Mwali chess games at 365Chess.com
  • Chitumbo Mwali player profile and games at Chessgames.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தும்போ_முவாலி&oldid=3860984" இலிருந்து மீள்விக்கப்பட்டது