சித்த யந்திரங்கள்
சித்த யந்திரங்கள் எண்களையும் எழுத்துக்களையும் கொண்டவை. எழுத்துக்களைப் போலவே எண்களுக்கும் சக்தி உள்ளது என்றும், எழுத்துக்களையும் எண்களையும் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் சக்கரமாக அமைத்து அதற்கு உண்டான குறிப்பிட்ட மந்திரத்தை குறிப்பிட்ட அளவில் ஜெபித்தால் அவை தொழிற்பட தொடங்கும் என்று கூறப்படுகிறது. நவக்கிரகங்களின் கிரக சாரங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளவும், தங்கள் தெய்வங்களின் அருளை பெற்றுக் கொள்ளவும் , பில்லி சூனியம் , ஏவல் போன்றவற்றிலிருந்து தம்மைச் சூழ்ந்து உள்ளவர்களைக் காக்கவும் சித்தர்கள் எண்களையும் எழுத்துக்களையும் மாறி மாறி இட்டு சக்கரங்களை உருவாக்கினர். அவற்றின் மூலம் தாங்கள் அடைந்த பலனையும் சக்கரங்கள் தயாரிக்கும் முறையையும் என்ன சக்கரத்திற்கு என்ன மந்திரம் எத்தனை தடவை சொல்லவேண்டு என்பதையும் அது என்ன என்ன வேலைகளைச் செய்யும் என்பதையும் தங்களின் பாடல்களில் தெளிவாகவே சொல்லிச் சென்றுள்ளனர். இப்பாடல்களை அவர் தன் மாணவராண புலஸ்தியருக்கு கூறுகிறார்.
விருட்ச மாரண சக்கரம்
தொகுஇது எத்தகைய மரத்தையும் மாரணம் செய்விக்கும் என்கிறார் அகத்தியர்.[1]
விருட்சங்களுக்கு விதியாய் அமையும் இந்த விருட்சமாரணச் சக்கரத்தை பூமியில் சித்தர்கள் மறைத்தார்கள். நான் உனக்கு சொல்கிறேன் கேள் என துவங்குகிறார்.[2] குறுக்காக ஐந்து கோடும் நெடுக்காக ஐந்து கோடும் கீற பதினாறு அறைகள் உருவாகும். அந்தக் கோடுகளின் நுனியில் சூலம் கீறி அந்த அறைகளுக்குள் இடவேண்டிய எழுத்துக்களையும் தனது பாடலில் குறிப்பிடுகிறார். இவ்வாறு தயாரித்த சக்கரத்தினை குறிப்பிட்ட விருட்சத்தின் அடிப் பக்கத்துக்கு அண்மையில் ஒரு குறிப்பிட்ட அளவு ஆழத்துக்கு சதுரமாக ஒரு குழி தோண்டி அதில் இந்தச் சக்கரத்தைப் போட்டு மண்ணால் மூடிவிட்டால் மூன்று நாளில் அந்த பச்சை மரம் பட்டுப்போய் நாசமாகிவிடும். வீணருக்கு இதை உரைத்தால் கேடு விளையும் என்கிறார்.
சத்துரு மாரணச் சக்கரம்
தொகுகுறுக்காக ஆறு கோடும் நெடுக்காக ஆறு கோடும் வரைந்தால் இருபத்தியைந்து அறைகள் உருவாகும். ஒவ்வொரு அறையின் பக்கவாட்டுப்பகுதி முனைகளிலும் சூலம் கீறிய பின்னர், குறிப்பட்ட சில எழுத்துக்களை அந்த அறைகளுக்குள் எழுதி, இந்த சக்கரத்தை ஒரு ஆலமரத்தின் கிழக்குப் பக்கமாகச் செல்லும் கிளையில் முக்கிய சத்துரு பெயரைச் சொல்லி கட்டிவிட்டு மூன்றுநாட்கள் சென்று அதை கழட்டினால் அந்த சத்துரு இறந்து விடுவான் என்கிறார்.
விலங்கு மாரணச் சக்கரம்
தொகுஅத்திமரத்து பலகை எடுத்து அதில் குறுக்காக ஐந்து கோடும் நெடுக்காக ஐந்து கோடும் கீறினால் பதினாறு அறைகள் உருவாகும்.அந்தக் கோடுகளின் நுனியில் சூலம் கீறிய பின்னர், அந்த அறைகளுக்குள் குறிப்பட்ட சில எழுத்துக்களை எழுதிட வேண்டும்.அந்தப் பலகையை எருக்கம் விறகிட்டு எரித்து அந்த சாம்பலை ஆற்று நீரில் கரைக்க வேண்டும், அப்படி ஆற்று நீரில் கரைக்கும் போது மனதில் நினைக்கும் காட்டு விலங்கானது அந்த நொடியே மாண்டுவிடும் என்கிறார். நகருக்குள் பிரவேசித்து மக்களைத் துன்புறுத்தும் விலங்குகளை இந்த சக்கரம் அழிக்க உனக்கு உதவும் என்றும் கூறுகிறார்.
காட்டேரிச் சக்கரம்
தொகுகுறுக்காக ஆறு கோடும் நெடுக்காக ஆறு கோடும் வரைந்தால் இருபத்தியைந்து அறைகள் உருவாகும்.ஒவ்வொரு அறையின் பக்கவாட்டுப்பகுதி முனைகளிலும் சூலம் கீறிய பின்னர், குறிப்பட்ட சில எழுத்துக்களை அந்த அறைகளுக்குள் எழுதி பின் அந்த சக்கரத்தை குறிப்பிட்ட பீஜ மந்திரத்தால் ஆயிரத்தி எட்டு தடவைகள் செபித்து அந்த யந்திரத்தை தாயத்தில் போட்டு ஒரு குறிப்பிட்ட நாளில் அணிந்து கொண்டால் காட்டேரி அடிமையாகி ஏவல் புரியும் என்கிறார் அகத்தியர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "பாரேதான் புலத்தியனே பண்புளானே
பாலகனே ஓரறிவுக் குற்றசாதி
நேரேதான் விருட்சங்க ளெதுவானாலும்
நேர்மையுடன் மார்க்கத்தை விளம்பக்கேண்மா"
"விதியான விருட்சமாரண சக்கரந்தான்
பதியான வைந்துவரை குறுக்கே கீறி
பாவலனே யைந்துவரை நெடுக்கேகீறி
மதியோடு மாளியது பதினாறாச்சு
மானிலத்தில் நாதாக்கள் மறைத்தசேதி"- அகத்தியர் - ↑ "தீர்க்கமுடன் விருட்சத்தின் அடிப்பாகத்தில்
அப்பனே சாண்நிகளஞ் சதுரந்தோண்டி
கேளப்பா சக்கரத்தை அதன் கீழ்ப்போட்டு
மணலாலே மூடே மூன்றேநா ள்தனிலே
நலமான விருட்சமது பட்டுப்போகும்
நாசமாம் விருட்சமது நாசமாகும்
நாயகனே பச்சைமரம் பட்டுப் போகும்
வீணருக்கு உரைத்திடாதே கேடுவிழையும்"- அகத்தியர்