சித்ராவதி ஆறு
சித்ராவதி ஆறு தென்னிந்தியாவில் பாயும் ஒரு ஆறு ஆகும். இது வட பெண்ணை ஆற்றின் துணை ஆறு ஆகும். சித்ராவதி ஆறு கருநாடகம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களில் பாய்கிறது. இதன் பாசண பரப்பளவு 5,900 km2 ஆகும். ஆன்மீக இடமான புட்டபர்த்தி இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
சுற்றுச்சூழல் பிரச்சினைகள்
தொகுஅதிகப்படியான ஆற்றுமணல் அள்ளுவது இங்கு சட்டத்திற்கு புறம்பாக நடைபெற்று வருகிறது. இதனால் சித்ராவதி ஆற்று படுக்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக நிலத்தடி நீர் மட்டம் மிக அதிக அளவு குறைந்து நீர் ஆதாரம் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.[1]
மதம் சார்ந்த முக்கியத்துவம்
தொகுசித்ராவதி ஆறானது தேவ கன்னி என கருதப்படுகிறது. இது புட்டபர்த்தி என்ற ஆன்மீக புனித நகரத்தின் வழியாக பாய்கிறது. இந்த ஆறானது புட்டபர்த்தி சத்திய சாயி பாபாவுன் தொடர்புடைய விடயமாக பல மக்கள் கருதுகின்றனர்.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Illegal sand mining rampant in Chitravathi river basin". Deccan Herald. 20 June 2012. http://www.deccanherald.com/content/258484/illegal-sand-mining-rampant-chitravathi.html. பார்த்த நாள்: 8 July 2013.
- ↑ "Captivating beauty of River Chitravathi". Deccan Herald. 14 September 2008 இம் மூலத்தில் இருந்து 2 April 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402165933/http://archive.deccanherald.com/Content/Sep142008/district2008091389858.asp. பார்த்த நாள்: 8 July 2013.
- ↑ "Chitravathi River, Puttaparthi, India". FirstPost. பார்க்கப்பட்ட நாள் 8 July 2013.