சித்ரா பெளர்ணமி

சித்ரா பௌர்ணமி

தொகு
      பெளர்ணமி தினம் மாதந்தோறும் வரும். தமிழ் இன மக்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தையும் இறை வழிபாட்டிற்குரிய நாளாக கருதுகின்றனர்.தமிழ் மாதம் சித்திரையில் வரும் பெளர்ணமி "சித்ரா பௌர்ணமி"  எனப்படும். 

வழிபாடு

தொகு
      அன்றைய தினம் தமிழ் மக்கள் வழிபடும் அனைத்துக் கோயில்களிலும் ‌சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மேலும் சில கோயில்களில் சித்திரை திருவிழாக்கள் நடத்தப்பட்டு பௌர்ணமி தினம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்படும். 

பூஜைகள், விரதங்கள்

தொகு

‌ சி‌த்ரா பவு‌ர்ண‌மி அ‌ன்று சிவன் ,முருகன் போன்ற கோயில்களில் கிரிவலம் செல்வார்கள்.

சி‌த்ரா பவு‌ர்ண‌மி அ‌ன்று காலை‌யி‌ல் கு‌ளி‌‌த்து முடி‌த்து பூஜையறை‌யி‌ல் ‌விநாயக‌ர் பட‌த்தை நடு‌வி‌ல் வை‌த்து, ‌சிவனை எ‌ண்‌ணி பூ‌ஜி‌க்க வே‌ண்டு‌ம். ச‌ர்‌க்கரை‌ப் பொ‌ங்க‌ல் செ‌ய்து படை‌த்து அதனை எ‌ல்லோரு‌க்கு‌ம் அ‌ளி‌க்கலா‌ம்.

    ‌பழ‌ங்கால‌த்‌தி‌ல், சி‌த்ரா பவு‌ர்ண‌மி அ‌ன்று ஆ‌ற்ற‌ங்கரை‌யி‌ல் உற‌ல் தோ‌ண்டி அத‌ற்கு ‌திருவுற‌ல் எ‌ன்று பெய‌ர் சூ‌ட்டி, அ‌ங்கே இறைவனை வல‌ம் வர‌ச் செ‌ய்வா‌ர்க‌ள். சி‌த்‌திரை மாத‌த்‌தி‌ல் தாராளமாக‌க் ‌கிடை‌க்கு‌ம் மா, பலா, வாழை போ‌ன்ற பழ‌ங்களை இறைவனு‌க்கு படை‌த்து பூ‌ஜி‌ப்பா‌‌ர்க‌ள்.

அறிவியல் உண்மை

தொகு
      இந்த நாளில் உறவினர், நண்பர்களுடன் நதிக்கரையில் உரையாடியபடி உண்பதுதான் பழங்காலம் தொட்டு இருக்கும் வழக்கமாகும்.

புழுக்கத்தையும், வெயிலின் உஷ்ணத்தையும் சமாளிக்க இப்படி நீர்நிலைக்கு அருகில் மக்களை வரவைப்பதே இந்த சித்ரா பெளர்ணமியின் விஞ்ஞானப் பூர்வ உண்மை. தமிழ்மக்கள் உறவினர்கள், நண்பர்கள் புடை சூழ அமர்ந்து உரையாடி, பாடி, மகிழ்ந்து உண்பது எல்லோருக்கும் பிடித்தமான விஷயம்தான்.

சித்ர குப்தன்

தொகு

புராண‌க் கதைக‌ளி‌ன்படி, ம‌னித‌ர்க‌ளி‌ன் பாவ, புண‌ணிய‌க் கண‌க்குகளை எழுது‌ம் ‌சி‌த்ர கு‌ப்த‌ன் அவத‌ரி‌த்த நாளு‌ம் இ‌‌ன்றுதா‌ன். அவ‌ர் ‌சிவ‌ன் வடி‌த்த ‌சி‌த்‌திர‌த்தை‌க் கொ‌ண்டு உருவா‌க்‌ப்ப‌ட்டதாலு‌ம், ‌சி‌த்‌திரை மாத‌த்‌தி‌ல் ‌பிற‌ந்ததாலு‌ம் ‌சி‌த்ர கு‌ப்த‌ன் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறா‌ர்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்ரா_பெளர்ணமி&oldid=2692573" இலிருந்து மீள்விக்கப்பட்டது