சித் பர்னசு

ஆத்திரேலிய துடுப்பாட்டக்காரர்

சிட்னி ஜார்ஜ் பர்னஸ் (Sidney George Barnes (5 சூன்,1916 – 16 டிசம்பர், 1973)  என்பவர் ஓர் முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் மற்றும் துடுப்பாட்ட எழுத்தாளர் ஆவார். இவர் 1938 -1948 ஆண்டுகளுக்கு இடையிலான காலங்களில் 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான சிறந்த ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக இவர் அறியப்படுகிறார்.  டிசம்பர் 1946 ஆம் ஆண்டில் சிட்னியில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் 234 ஓட்டங்களை எடுத்தார். டான் பிராட்மனுடன் இணைந்து ஐந்தாவது இணைக்கு 405 ஓட்டங்களை எடுத்தார்.  இவர் 19 ஆட்டப் பகுதிகளில் விளையாடி 63.05 எனும் சராசரி வைத்திருந்தார்.

1936-37 ஆம் ஆண்டுகளில் இவர் நியூ சவுத் வேல்சு அணிக்காக முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில்  அறிமுகமானார். பின் 1938 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அந்தத் தொடருக்கான அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான போட்டிகளில் இவர் ஆர்தர் மோரிசுடன் இணைந்து துவக்க வீரராக களம் இறங்கினார். பின் பர்னஸ், இன்விசிபிள்ஸ் எனும் குழுவில் உறுப்பினரானார். 1948 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான அந்தத் தொடரினை முழுமையாக ஆத்திரேலிய அணி கைப்பற்றியது. அதன் பிறகு துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பின் 1951-52 ஆம் ஆண்டில் மீண்டும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். ஆனால் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தத் தவறினார்.[1]

ஆரம்பகால வாழ்க்கைதொகு

பர்னஸ் சிட்னியில் உள்ள அன்னதலே எனும் ஒரு புற நகர்ப் பகுதியில் 1916 ஆம் ஆண்டில் பிறந்தார்.[2] ஆனால் இவரின் சுயசரிதையில் இவர் குயீன்சிலாந்தில் 1918 அல்லது 1919 ஆம் ஆண்டில்  பிறந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[3] இவரின் பெற்றோரான ஆல்பிரட் பெர்சிவல் பர்னஸ் மற்று ஹில்டா மே பர்னசுக்கு இவர் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார்.  இவரின் பெற்றோர்கள் வடக்கு நியூ சவுத் வேல்சில் உள்ள டாம் ஒர்த் எனும் பகுதியில் விவசாயம் செய்து வந்தனர். இவரின் தந்தை டைபாய்டு நோயினால் காலமானார். அதன் பின் அப்போது கர்ப்பமாக இருந்த ஹில்டா சிட்னியில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்றார்.

முதல்தரத் துடுப்பாட்டம்தொகு

1936-37 ஆம் ஆண்டுகளில் நியூ சவுத் வேல்சு அணியின் தேர்வுக் குழுவினர் இவரின் ஆட்டத்திறனால் கவனிக்கப்பட்டனர். பின் தனது முதல் போட்டியில் ஸ்டான் வாசிங்டனை கேட்ச் பிடித்து வீழ்த்தினார்.[4] சிட்னி துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற போட்டியில் தென் ஆத்திரேலிய அணிக்கு எதிராக இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.பின் மட்டையாட்டத்தில் முதல் ஆட்டப் பகுதியில் 31 ஓட்டங்களும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 44 ஓட்டங்களும் எடுத்து எல் பி டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இருமுறையும் சுழற்பந்து வீச்சாளரான ஃபிராங்க் வார்டு பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.[5]

1937-38 இல் நடைபெற்ற குயீசுலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 68 ஓட்டங்கள் எடுத்தார்.பின் நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் நூறு ஓட்டங்களை அடித்தார்.விக்டோரியா அணிக்கு எதிரான போட்டியின் போது எர்னி மெக்கார்மிக் வீசிய பந்து இவரின் மூட்டில் காயம் ஏற்படுத்தியது.1938 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிராகத் தேர்வான இளம் ஆத்திரேலிய வீரர் இவர் ஆவார்.

சான்றுகள்தொகு

  1. As a convention, cricket seasons are denoted as a single year to represent northern hemisphere summer, or dashed for southern hemisphere. See Cricket season for more information.
  2. Smith, p.3. "was born in Annandale on 5 June 1916. She christened him Sidney George after the city of his birth and his maternal grandfather. Sid's place of birth would remain a problem for many years to come. He always thought it was Charters Towers in குயின்ஸ்லாந்து and said so in his autobiography. He also confessed confusion over the year citing 1918 or 1919, rather than 1916."
  3. Barnes, p. 13.
  4. Smith, p. 15.
  5. "New South Wales v South Australia–Sheffield Shield 1936/37". CricketArchive. 23 February 1937. 3 December 2007 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்_பர்னசு&oldid=2923473" இருந்து மீள்விக்கப்பட்டது