சிந்தனைக் கோளம்

சிந்தனைக் கோளம் (noosphere, நூஸ்பியர்) என்ற சொல் மானுட சிந்தனைகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பு எப்படி புவியின் ஒரு முக்கிய சக்தியாக உயிரிக் கோளத்தின் அடுத்த நிலையாக செயல்படுகிறது என்பதைக் குறிக்கின்றது. இதனை உருசிய நிலவியலாளர் விளாதிமீர் வெர்னாத்ஸ்கி மற்றும் இயேசு சபை பாதிரியார் பியேர் தெயில்ஹார்த் டி சார்டின் ஆகியோர் முதன்மையாகப் பயன்படுத்தினர். 1922 இல் சார்டின் இச்சொல்லை முதன் முதலாக உருவாக்கினார். வெர்னாத்ஸ்கியின் பார்வையில் புவி நிலக்கோளம், உயிரிக்கோளம் ஆகிய நிலைகளுக்கு பின்னர் சிந்தனைக் கோளமாக உருவாகிறது. சிந்தனைக் கோளம் புவியின் உயிரிக்கோளத்திலிருந்து எழுந்தாலும் அது உயிரிக்கோளத்திலும் நிலக்கோளத்திலும் தாக்கம் செலுத்தும் முக்கிய இயங்கு சக்தியாக செயல்படுகிறது. இன்று இணையத்தை ஒரு மிக முக்கிய மின்னணுப் பின்னல்களால் இணைக்கப்பட்ட சிந்தனைக் கோள வெளிப்பாடாக காணலாம். தமிழ் உலகில் ஈழ எழுத்தாளர் மு. தளையசிங்கம் இக்கோட்பாடுகளை முதன் முதலாக தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்தனைக்_கோளம்&oldid=1367050" இலிருந்து மீள்விக்கப்பட்டது