சிந்தாமணியூர்
சிந்தாமணியூர் தமிழ்நாடு, சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் மேட்டூர் வட்டத்தில் அமைந்துள்ளது.
பெயர் வரலாறு
தொகுசிந்தாமணி-ஒளி குன்றாத மணி எனப்பொருள்படும்.தமிழில் 21 பந்தை வைத்து ஆடுவதாக சீவக சிந்தாமணியில் விளக்கியுள்ளார் திருத்தக்கதேவர்,சிந்தாமணி என்ற பெயருடைய சில முன்னோர்கள் வாழ்ந்ததாக அறியப்படுகின்றது. இந்த ஊரில் 200 வருடங்களுக்கு முன் சிந்தாமணிகவுண்டர் என்பவர் இந்த ஊரை நிர்மாணித்தார், அவருடைய பெயராலேயே இவ்வூர் சிந்தாமணியூர் என்று அழைக்கப்படுகின்றது.
இவ்வூரில் தொடக்ககாலத்தில் வேளாண்மை தொழிலே பிரதானமாக இருந்து வந்தது, வேளாளக்கவுண்டர்கள் மட்டுமே வசித்து வந்தனர், பின்னர் தேவாங்கச்செட்டியார்கள் இவ்வூரில் குடியேறிய பின் கைத்தறி பட்டுநெசவுத்தொழில் வேகமாக வளரத்தொடங்கியது, இன்று பட்டு நெசவுத் தொழிலே முக்கியமானத் தொழிலாகும். உயர்தர சுத்தப்பட்டு சேலைகள் இங்கு நெய்யப்பட்டு நாடு முழுதும் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. சின்னகாஞ்சிபுரம் என்று அழைக்கப்படும் அளவிற்கு நேர்த்தியிலும் சில்லரை விற்பனையிலும் முன்னிலையில் உள்ளது. மேச்சேரி ஒன்றியத்திலேயே மேச்சேரிக்கு அடுத்து இதுவே பெரிய ஊராகும். அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தருகிறது. சிந்தாமணியூரில் சித்திரைத் திங்கள் நடைபெறும் மாரியம்மன் திருவிழா மிகவும் பெயர் பெற்றதாகும், வேளாளக் கவுண்டர்கள் மற்றும் தேவாங்க செட்டியார்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர், ஓமலூரில் இருந்து 6 கிமீ தொலைவில் இவ்வூர் உள்ளது.