சிந்தித்து முன்கணிப்பவர் உவமை
சிந்தித்து முன்கணிப்பவர் உவமைகள் என்பது இயேசு அடுத்தடுத்துக் கூறிய இரு உவமைகளைக் குறிக்கும். புதிய ஏற்பாட்டில் லூக்கா 14:25-33 இல் இவ்வுவமைகள் இடம் பெறுகின்றன. ஒருவர் கடவுளுக்கு அடுத்துதான் தன் சொந்த விருப்பத்தையும், நலனையும், தன்னைச் சார்ந்தோரின் நலனையும் கவனிக்க வேண்டும் என இவை எடுத்துரைக்கின்றன.[1]
உவமையின் விவரிப்பு
தொகுலூக்கா நற்செய்தியில் இவ்வுவமை பின்வருமாறு உள்ளது:
பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது.
தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது.
உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா?
இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை என்பார்களே!
வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா?
எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா?
அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.
- லூக்கா 14:25-33, பொது மொழிபெயர்ப்பு
மேற்கோள்கள்
தொகு- ↑ Charles McCollough, The Art Of Parables: Reinterpreting the Teaching Stories of Jesus in Word and Scripture, Wood Lake Publishing, 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55145-563-3, pp. 94-95.