சின்னக்கொத்தூர் குஞ்சம்மாள் கோயில்

சின்னகொத்தூர் குஞ்சம்மாள் கோயில் என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டம் சின்னக்கொத்தூர் என்ற ஊரில் உள்ள ஒரு சிவன் கோயிலாகும். இந்த கோயில் அமைந்துள்ள ஊரானது போசளப் பேரரசின் மன்னனான வீர இராமநாதனின் தலைநகராக ஒரு காலத்தில் இருந்ததாகும்.

கோயிலின் பழமை

தொகு

இக்கோயில் 12ஆம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டபட்ட கோயிலாகும். இக்கோயிலில் இதுவரை 15 கல்வெட்டுகள் படியெடுக்கபட்டுள்ளன. படியெடுக்கப்படாத ஆறு கல்வெட்டுகளும் உள்ளன. அக்கல்வெட்டுகளின் படி இக்கோயில் முதலில் ஏகாம்பரநாதர் கோயில் எனவும், விஜயநகரப் பேரரசு காலத்தில் கைலாசநாதர் கோயில் எனவும் அழைக்கபட்டது. ஆனால் தற்போது குஞ்சம்மாள் கோயில் என்று அழைக்கபடுகிறது.[1] இங்கு ஏராளமான நடுகற்கள் உள்ளன.[2]

மேற்கோள்கள்

தொகு