சின்னஞ்சிறுவயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
இந்த கட்டுரை விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கோ கலைக்களஞ்சிய கொள்கைகளுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம். இதனை நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது.
கருத்துக்களை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். |
சின்னஞ்சிறுவயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி என்பது 1980 இல் வெளிவந்த மீண்டும் கோகிலா திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு தமிழ்ப் பாடல் ஆகும். இந்தப் பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதினார். இந்தப் பாடலை கே. ஜே. யேசுதாஸ், எஸ். பி. சைலஜா இருவரும் இணைந்து பாடியிருந்தனர்.
"சின்னஞ்சிறுவயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி" | ||
---|---|---|
ஒலிச்சுவடு பாடலை பாடியவர்கள் கே. ஜே. யேசுதாஸ், எஸ். பி. சைலஜா
மீண்டும் கோகிலா திரைப்படத்திலிருந்து | ||
வெளிவந்த ஆண்டு | 1980 | |
வகை | ஒலிச்சுவடு | |
பாடலாசிரியர் | கண்ணதாசன் |
பாடல் காட்சி
தொகுஅனேகமான தென்இந்தியத் திரைப் படங்களில் பெண் பார்க்கும் படலம் ஒரு நாடகம் போலவே அமைந்திருக்கும். பெண் வீட்டார் பஜ்ஜி, சொஜ்ஜி, வடை, முறுக்கு, பலகாரம் என்று செய்து வைத்துக் காத்திருக்க மாப்பிள்ளை ஒரு பொம்மை போல வருவார். அவரை இயக்கி வைப்பது அவரது பெற்றோராகத்தான் இருக்கும். வந்து இருந்து கொண்டு பெண் வீட்டார் செய்து வைத்த பலகாரங்களைச் சுவைத்துக் கொண்டு பெண் கூனா, குருடா, செவிடா என்று ஆராய அவளை ஆடு, பாடு என்று ஆட்டுவித்துவிட்டு வீட்டுக்குப் போய் முடிவு சொல்வதாகச் சொல்லிச் செல்வதாக இருக்கும். இப் படத்திலும் பஜ்ஜி, சொஜ்ஜியிலிருந்து பாடுவது வரை எல்லாம் நடக்கிறது. ஆனால் கமலஹாசன் தன் சம்மதத்தை இப்பாடலினூடு தெரிவிக்கும் விதம் சற்று வித்தியாசமாக அமைந்துள்ளது. மணப்பெண்ணான சிறீதேவி பெண் பார்க்கும் படலத்தின் போது இந்தச் சின்னஞ் சிறு வயதினிலே எனக்கோர் சித்திரம் தோணுதடி என்ற பாடலைத்தான் பாடத் தொடங்குகிறார். பாடிக் கொண்டு போகும் போது சிறீதேவிக்கு, இடையில் பாடல் மறந்து விடுகிறது. வழமையான பாடல்களில் என்றால் இதுவே கெட்ட சகுனமாக்கப் பட்டு கல்யாணம் நிறுத்தப் பட்டு விடும். ஆனால் இங்கே கமலஹாசன் பாடலைத் தொடர்ந்து பாடி சம்மதத்தைத் தெரிவிப்பதாய் காட்சி அமைகிறது.
இசை
தொகுபாட்டி வெற்றிலை பாக்கு இடிக்கும் ஓசை, இடித்த வெற்றிலை பாக்கை துளாவியெடுக்கும் ஓசை, தாத்தா வெற்றிலை பாக்கை வாய்க்குள் போட்டுக் குதப்பும் ஓசை, வெள்ளிக் கிண்ணத்தைத் தட்டில் வைக்கும் ஓசை போன்ற நாளாந்தம் நாம் கேட்கும் ஓசைகள் பாட்டுடன் இணைக்கப் பட்டு அந்த ஓசைகள் கூட இசைகள்தான் எனவும் இப்பாடலில் காட்டப்பெற்றுள்ளது.
பாடல் வரிகள்
தொகுசின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி
மோகனப் புன்னகையில் ஓர்நாள் மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர் ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்
கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு என்றான்
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி
சபாஷ், பலே
வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே செல்லம்மா...
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி