சின்னதுறை
சின்னதுறை (Chinnathurai) இந்தியாவின் தமிழ்நாடில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிற்றூராகும். இது இந்தியத் தீவகத்தினந் தெற்கு முனையில் உள்ள தூத்தூர் பேரூராட்சியின் பகுதியாகும். இதற்கு அருகாமையில் மேற்கே கேரள மாநிலத் திருவனந்தபுரமும் கிழக்கே தமிழ்நாட்டின் நாகர்கோயிலும் ஆகிய இருநகரங்கள் அமைந்துள்ளன. இது கடற்கரைப் பகுதி சார்ந்த மீன்பிடிதொழில் ஊராகும். இங்கு சுறாக்களும் பெருமீன் வகைகளும் பிடிக்கப்படுகின்றன.
தூத்தூர் சின்னதுறை
Thoothoor Chinnathurai | |
---|---|
ஊர் | |
ஆள்கூறுகள்: 8°15′40″N 77°08′35″E / 8.260998°N 77.143094°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 3,00,000 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
தூத்தூர் அஞ்சல் குறியீட்டடெண் | 629176 |
அருகாமை நகரம் | திருவனந்தபுரம், நாகர்கோயில் |
இந்தியக் காலநிலைகள் | வெப்பமண்டலம், கடற்கரை (கோப்பன்) |
இணையதளம் | www |
காலநிலை
தொகுசின்னதுறை வெப்ப மண்டலக் காலநிலையைப் பெற்றுள்ளதால் இங்கு பருவ வேருபாடுகள் உணரப்படுவதில்லை. சராசரி பெரும வெப்பநிலை 34 °செ ஆகும். சராசரி சிறும வெப்பநிலை 21 °செ ஆகும். உயர் ஈரப்பதம் பருவமழியின்போது 90% ஆக அமைகிறது.
கல்வி
தொகுசின்னதுறையில் கல்விகற்ரோர் வீதம் உயர்வாக உள்ளது. 2017 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இவ்வூர் 99.5% கற்றோர் வீதத்தைப் பெற்றுள்ளது. ஆண்களின் கற்றோர் வீதம் 99% ஆகவும் பெண்களின் கற்றோர் வீதம் 100% ஆகவும் உள்ளது. இங்குள்ள உயர்வான கல்வி வளர்ச்சிக்கு கிறிஸ்தவ அமைப்புகளே பொறுப்பாகும். தூய யூதெ கல்லூரி உயர்கல்வி வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்துள்ளது. பெரும்பாலான மக்கள் நன்கு கல்விகற்று பல பன்னாட்டுக் குழுமங்களில் பணிபுரிகின்றனர். பலர் பல அயல்நாடுகளின் வாழ்கின்றனர்.
இந்த ஊருக்குள்ளேயே நான்கு பள்ளிகளும் ஒரு கல்லூரியும் உள்ளன. இருபள்ளிகள் ஊருக்கு வெளியே அமைந்துள்லன. தூய யூதெ குமுகக் கூடம்[1] பொது கூடமாகப் பயன்படிகிறது. தூய யூதெ விளையாட்டுக் குழு ஒரு நூலகத்தையும் பேணுகிறது. அரசு சார்ந்த ஒரு சிறு அஞ்சலகமும் பெட்ரோல் வங்கியும் மக்களின் தேவைகளை நிறைவு செய்கிறது.