சின்னத்தம்பி கதை

சின்னத்தம்பி கதை என்பது நாட்டார் கதைப்பாடல்களில் சொல்லப்படுகின்ற கதையாகும். இக்கதை அக்காலத்தில் தேவர் மற்றும் சக்கிலியர் சாதிகள் இடையேயான முரண்பாட்டினை விளக்குகிறது.[1] அத்துடன் உயர்சாதி மக்கள் தாழ்ந்த சாதி மக்களுக்கு இழைத்த கொடுமையையும் பதிவு செய்துள்ளது.[1]

காவல்காரர்களாக தேவர் சாதியை சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களால் பயிர்களை அழிக்கும் வன விலங்குகளை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் சக்கிலி சாதியைச் சார்ந்த சின்னத்தம்பி அவனுடைய சாதியைச் சார்ந்த இளைஞர்களை திரட்டி விலங்குகளை வேட்டையாடி வெல்கிறான்.

அவனுடைய வீரம் அறிந்த மக்கள் தலைவனாக ஏற்கிறார்கள். சின்னத்தம்பியின் திறனை அறிந்த ஜமிந்தார், அவனை படைத்தலைவனாக ஆக்குகிறார். இதனால் தேவர் சாதி மக்களுக்கு அவமானமாகிறது. அவர்கள் சின்னத்தம்பியை வஞ்சித்துக் கொல்கின்றனர்.[1]


ஆதாரங்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 http://www.tamilvu.org/courses/degree/a061/a0612/html/a0612302.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னத்தம்பி_கதை&oldid=2083164" இலிருந்து மீள்விக்கப்பட்டது