சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயில்

திருவாசகத்தை அருளிய மாணிக்கவாசகருக்கு தேனி மாவட்டத்தின் சின்னமனுாரில் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. [1]

இக்கோயிலானது சிவகாமியம்மன் கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ளதால் இக்கோவிலுக்கும் பக்தா்கள் அதிக அளவில் சென்று வருகின்றனா். இங்கே தமிழில் வழிபாடு செய்யப்படுகிறது. [2]

சன்னிதிகள்

தொகு

இக்கோயிலின் மூலவரான மாணிக்கவாசகர் தெற்கு நோக்கி உள்ளார். இவர் நின்ற கோலத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து, வலது கையில் ருத்ராட்ச மாலையுடன் சின்முத்திரைக் காட்டியபடி உள்ளார்.

காசிவிசுவநாதர் - விசாலாட்சி இருவரும் பரிவார மூர்த்திகளாக உள்ளனர்.

இக்கோயிலில் சண்டிகேசுவரர், நவகிரக மண்டபம், கோரசனீசுவரர், சித்ரகுப்தர் சன்னதிகள் உள்ளன.

விழாக்கள்

தொகு
  • அனைத்து தமிழ் மாதங்களிலும் மக நட்சத்திரத்தன்று மாணிக்கவாசகருக்கு சிறப்பு பூசை செய்யப்படுகிறது.
  • ஆனி, மார்கழி மாதங்களில் உத்திர நட்சத்திரத்தன்று மாணிக்கவாசகரும், நடராஜர் இருவரும் ஒரே சப்பரத்தில் உலா வருகின்றனர்.
  • மாணிக்கவாசகர் குரு பூஜை நாளன்று தனித்து உலா வருகிறார்.

தல சிறப்புகள்

தொகு
  • சண்டிகேசுவரர் நின்ற கோலத்தில் உள்ளார். பொதுவாக சண்டிகேசுவரர் அமர்ந்த நிலையிலியே கோயில்களில் இருப்பார்.
  • தியான கோலத்தில் எழுத்தாணியுடன் சித்ரகுப்தர் சிலையுள்ளது.
  • நவக்கிரக மண்டபத்தில் உள்ள சனீசுவரர் கையில் கிளியுடன் உள்ளார்.
  • கோரசனீசுவரர் எனும் சந்நதியில் சனிபகவான் கோரைப் பற்களுடன் உள்ளார்.

சான்றுகள்

தொகு
  1. ValaiTamil. "அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோயில் - arulmigu manikavasagar thirukoyil".
  2. "Manickavasagar Temple : Manickavasagar Manickavasagar Temple Details - Manickavasagar - Chinnamanur - Tamilnadu Temple - மாணிக்கவாசகர்".