சிபான் என்பது காம்ப்ரிஹென்சிவ் பேர்ள் ஆர்க்கைவ் நெட்வொர்க் என்பதன் சுருக்கமாகும். இது இணையத்தில் பேர்ள் நிரல்களை கொண்டுள்ள தளமாகும். இந்த தளத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பேர்ள் நிரல்கள் சேமிக்கப்பட்டுள்ளன.[1] நிரல்களுடன் அவற்றுக்கான ஆவணங்களும் கிடைக்கின்றன. மின்னஞ்சல் அனுப்புதல், கோப்புகளை படித்தல் உள்ளிட்ட பொதுவான செயல்பாடுகளுக்கான நிரல்களை காணலாம். இத்தகைய செயல்பாடுகளுக்காக நிரல் எழுதி நேர விரயமாவதற்கு பதிலாக, இங்கே தேடிப் பெறலாம். இந்த தளத்தில் கிடைக்கக்கூடிய பெரும்பாலான நிரல்கள் இலவசமானவை, திறமூல உரிமை கொண்டவை.[2] இந்த தளத்தை எவரும் பயன்படுத்த முடியும்.

சிபான் தளத்தின் சின்னம்

நிரல் பகுதி

தொகு

பெரும்பாலான நிரல் மொழிகளில், நிரல்களை பகுதிகளாகப் பிரித்திருப்பர். இவற்றை மாடியூல் என்பர். இவற்றை வெவ்வேறு நிரல்களில் பயன்படுத்த முடியும். இவற்றில் பல மாடியூல்கள் பேர்ள் மொழியுடன் சேர்த்தே வழங்கப்படுகின்றன. ஏனையவற்றை நாமே பதிவிறக்கி நிறுவிக் கொள்ள வேண்டும்.

சான்றுகள்

தொகு
  1. "CPAN front page". பார்க்கப்பட்ட நாள் 2012-10-09.
  2. "How are Perl and the CPAN modules licensed?". Most, though not all, modules on CPAN are licensed under the GNU General Public License (GPL) or the Artistic license...

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிபான்&oldid=1801589" இலிருந்து மீள்விக்கப்பட்டது