சிபைட்டு
சிபைட்டு (Chibaite) என்பது SiO2•n(CH4,C2H6,C3H8,i-C4H10) என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இவ்வாய்ப்பாட்டிலுள்ள n இன் அதிகபட்ச மதிப்பு 3/17 ஆகும். ஓர் அரிய சிலிக்கேட்டு தாதுவான சிபைட் கனிமம் சிலிகா கிளாத்தரேட்டு எனப்படும் சிலிகா கூடுவகை சேர்மம் என்று வகைப்படுத்தப்படுகிறது. மேலும், இத்தாது இருதொகுதி வகைபாடான எம்3 கனசதுர கட்டமைப்பில் மீத்தேன், ஈத்தேன், புரோப்பேன் ஐசோபியூட்டேன் போன்ற பல்வேறு ஐதரோகார்பன் மூலக்கூறுகளுக்கு சிலிகா கூடு தனக்குள் இடமளிக்கிறது [1][2].
சிபைட்டு Chibaite | |
---|---|
அரிதான சிலிக்கா-ஐதரோகார்பன் தாதுவான சிபைட்டின் வெள்ளை படிகங்கள் (IMA 2008-067) மற்றும் போசோயிட்டு (IMA 2014-023) இரண்டு இனங்களுக்கும் உலகளவில் அறியப்பட்ட ஒரே இடம்: அரகாவா, மினாமிபோசோ நகரம், சிபா மாகாணம், ஓன்சு தீவு, சப்பான். | |
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | SiO2•n(CH4, C2H6, C3H8, i-C4H10) (n ≤ 3/17) |
இனங்காணல் | |
படிக அமைப்பு | சம அளவு |
மோவின் அளவுகோல் வலிமை | 7 |
மிளிர்வு | பளபளப்பு |
ஒப்படர்த்தி | 1.933 |
ஒளியியல் பண்புகள் | ஒருபடித்தானது |
ஒளிவிலகல் எண் | 1.470 |
சப்பான் நாட்டின் பெரிய தீவான ஒன்சு திவிலுள்ள சிபா மாவட்டத்தின் மினாமிபோசோ நகரத்திலுள்ள அராகாவாவில் முதன்முதலில் சிபைட்டு கனிமம் கண்டறியப்பட்டது. இந்த கனிமத்தை ஐ.எம்.ஏ எனப்படும் அனைத்துலக கனிமவியல் நிறுவனம் 2009 ஆம் ஆண்டில் அங்கீகரித்தது [1][2].
பன்னாட்டு கனிமவியல் சங்கம் சிபைட்டு கனிமத்தை Cib[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Chibaite on Mindat.org
- ↑ 2.0 2.1 The Discovery of Chibaite, Elements, June 2012, section: Japan Association of Mineralogical Sciences p. 230
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.