சிமோன் டாட்டா

சிமோன் நேவல் டாடா, (Simone Naval Tata) துனோயர் என்றும் அழைக்கப்படும் இவர் டாட்டா குடும்பத்தைச் சேர்ந்த சுவிட்சர்லாந்துநாட்டைச் சேர்ந்த இந்திய வணிகப் பெண்ணாவார். [1]

சிமோன் டாட்டா
வாழ்க்கைத்
துணை
நேவல் டாட்டா
பிள்ளைகள்நோயல் டாட்டா
உறவினர்கள்டாட்டா குடும்பம்

இவர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் பிறந்து வளர்ந்தார். ஜெனீவா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவர் 1953 ஆம் ஆண்டில் ஒரு சுற்றுலாப்பயணியாக இந்தியாவுக்கு வருகைத் தந்தார். அங்கு இவர் நேவல் எச். டாடாவை சந்தித்தார். அவர்கள் 1955 இல் திருமணம் செய்து கொண்டனர். பிறகு இவர் மும்பையில் நிரந்தரமாக குடியேறினார். [2] இவர்களுக்கு நோயல் டாடா என்ற ஒரு மகன் இருந்தார்.

1962 ஆம் ஆண்டில் டாடா எண்ணைய் ஆலைகள் சிறு துணை நிறுவனமாக இருந்தபோது, 1962 ஆம் ஆண்டில் இவர் லக்மே வாரியத்தில் நிர்வாக இயக்குநராகச் சேர்ந்தார். 1982 ஆம் ஆண்டில் அதன் தலைவராக உயர்ந்தார். மேலும் டிரெண்ட் நிறுவனத்தின் நிர்வாகமற்ற தலைவராக 30 அக்டோபர் 2006 வரை பணியாற்றினார். [3]

இவர் 1989 இல் டாடா தொழி நிறுவனக் குழுவில் நியமிக்கப்பட்டார். [4]

சில்லறைத் துறையின் வளர்ச்சியைக் கண்டு, 1996 இல் டாடா லக்மேவை இந்துஸ்தான் லீவர் லிமிடெட்டுக்கு விற்றது. மேலும் விற்பனையின் மூலம் சம்பாதித்த பணத்திலிருந்து டிரெண்டை உருவாக்கியது. லக்மேவின் அனைத்து பங்குதாரர்களுக்கும் டிரெண்டில் சமமான பங்குகள் வழங்கப்பட்டன. வெஸ்டைட் பொருட்களும், கடைகளும் டிரெண்டிற்கு சொந்தமானது.

உசாத்துணை

தொகு
  1. "The seven in the Tata clan". Financial Chronicle இம் மூலத்தில் இருந்து 21 ஆகஸ்ட் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100821002825/http://www.mydigitalfc.com/companies/seven-tata-clan-561. 
  2. "Simone Tata". The Asha Centre. Archived from the original on 2014-12-17. பார்க்கப்பட்ட நாள் 17 Dec 2014.
  3. Kumar, Pramod (26 August 2007). "Simone Tata". The Sunday Indian இம் மூலத்தில் இருந்து 19 ஜனவரி 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180119140143/http://www.thesundayindian.com/en/story/simone-tata/7/3142/. 
  4. "Simone N Tata". Bloomberg. பார்க்கப்பட்ட நாள் 17 Dec 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிமோன்_டாட்டா&oldid=3584083" இலிருந்து மீள்விக்கப்பட்டது