பேச்சியம்மன் கோயில், மதுரை
(சிம்மக்கல் பேச்சியம்மன் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பேச்சியம்மன் கோயில், மதுரை நகரத்தின் சிம்மக்கல் பகுதியில், வைகை ஆற்றின் தென்கரையில், பேச்சியம்மன் படித்துறையில் அமைந்துள்ளது. [1]
கோயிலின் சிறப்பு
தொகுஇக்கோயிலில் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12 மணிக்கு பேச்சியம்மனை நினைத்து மண் விளக்கு ஏற்றினால் பெண் சாபம் விலகும் மோட்சம் கிட்டும்
வேண்டுதல்கள்
தொகு- பேச்சில் குறைபாடு உள்ளவர்களும், பேச்சுத்திறமை வேண்டுபவர்களும் பேச்சி அம்மனை வழிபட்டால், பேச்சு குறைபாடு நீங்கி பேச்சுத்திறமை வளரும் என்பது நம்பிக்கை.
- ராகு கேது தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகருக்கு அபிஷேக, அர்ச்சனை செய்தால் தோசம் நீங்கும்.
சன்னதிகள்
தொகுபேச்சியம்மன் கோயிலில் விநாயகர், முருகன், மீனாட்சி சுந்தரேஸ்வரர், மகாலட்சுமி, சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, காளி, துர்க்கை, தத்தாத்ரேயர், ஆஞ்சநேயர், நவகிரகம், கருப்பசாமி, இருளப்பசாமி, அய்யனார், வீரமலை, பெரியண்ணன், சின்னண்ணன், சப்த கன்னியர் ஆகியோரை ஒரே இடத்தில் வழிபடலாம்.