சியார்ச்சு பிளாய்டு


சியார்ச்சு பெரி பிளாய்டு சூனியர் (அக்டோபர் 14, 1973 - மே 25, 2020) ஓர் ஆப்பிரிக்க - அமெரிக்கர். மினியாபோலிசில் ஒரு மளிகை கடையில் கள்ளப்பணத்தை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு காவல்துறையால் கைது செய்யப்படும்போது கொல்லப்பட்டவர்.

George Floyd
படிமம்:George Floyd.png
Floyd in 2016
பிறப்புGeorge Perry Floyd Jr.
(1973-10-14)அக்டோபர் 14, 1973 [1]
Fayetteville, North Carolina, U.S.
இறப்பு (அகவை 46)
Minneapolis, Minnesota, U.S.
மற்ற பெயர்கள்Big Floyd
பணி
  • Truck driver
  • security guard
  • rapper
சொந்த ஊர்Houston, Texas, U.S.
பிள்ளைகள்5

தொடக்கக்கால வாழ்க்கையும் கல்வியும்

தொகு

பிளாய்டு அக்டோபர் 14, 1973 அன்று வட கரோலினாவின் ஃபாயெட்டெவில்வில் சியார்ச்சு பெரி அவர்களுக்கும் இலார்சீனியா "சிசி" சோன்சு பிளாய்டு ஆகியோருக்குப் மகனாக பிறந்தார். இவருக்கு நான்கு உடன்பிறப்புகள் இருந்தனர். [2] [3] பள்ளி மற்றும் கல்லூரி காலகட்டத்தில் டெக்சாஸ் அணிக்காக கால்பந்து மற்றும் கூடைப்பந்து விளையாட்டு போட்டிகளில் கலந்துக்கொண்டு விளையாடியுள்ளார்.

இப்பாப்பு இசை கலைஞராகவும், மத வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். [4]1997-2005க்கும் இடையிலான ஆண்டுகளில் எட்டு குற்ற செயலுக்காக தண்டனை பெற்றிருந்தார். பின்னர் 2007 ஆம் ஆண்டு ஒரு கொள்ளை சம்பவத்திற்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார்.

2014இல் தெக்குசாசில் இருந்து மினியாபோலிசுக்கு இடம்பெயர்ந்தார். அங்கு கனரக வாகன ஓட்டியாகவும், கேளிக்கை அரங்கின் கவலராகவும் வேலை செய்து வந்தார். 2020இல் ஏற்பட்ட கொரோனா தொற்றுநோய் கட்டுபடுத்துதல் காரணமாக அறிவிக்கப்பட ஊரடங்கினால் தனது வேலையை இழந்தார்.

இறப்பு

தொகு

மே 25, 2020 அன்று, மினியாபோலிசின் பவுடராரன் பூங்காவில் உள்ள ஒரு மளிகை கடையில் $ 20 மதிப்பிலான கள்ளப்பணத்தை பயன்ப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கடையின் உரிமையாளர் காவல்துறைக்கு அழைப்பு விடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிளாய்டிற்கு கைவிலங்கிட்டு கைது செய்தனர்.

கைது செய்த வெள்ளையின காவல்துறை அதிகாரி பிளாய்டை வீதியில் கீழே தள்ளிவிட்டு அவரின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தினர். [5] சுமார் எட்டு நிமிடங்கள் தொடார்ந்து பிளாய்டின் கழுத்தில் வெள்ளையின காவல்துறை அதிகாரி முழங்காலை வைத்து அழுத்திக்கொண்டு இருந்தார்.

கழுத்தில் உண்டாகிய அழுத்தத்தினால் கடைசி இரண்டு நிமிடத்தில் எந்தவொரு அசைவின்றி வீதியில் கிடந்தார். பிளாய்டின் இந்த நிலைமையை கண்ட அதிகாரிகள் மருத்துவ உதவிக்கு அழைப்பு விடுத்தனர். இருந்தும் மருத்துவ உதவிகள் வரும்வரை அந்த வெள்ளையின காவல்துறை அதிகாரி பிளாய்டின் கழுத்தில் வைத்த முழங்காலை எடுக்கவில்லை. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு பிளாய்ட் இறந்ததாக அறிவிக்கப்பட்டார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் பிளாய்டின் மரணத்திற்கு காரணமாக காவல்துறை அதிகாரி அவரின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தத்தினால் தான் என்பது அறிவிக்கபட்டது. [6] [7] [8]

போராட்டம்

தொகு

பிளாய்டின் மரணத்திற்குப் பிறகு, கறுப்பின மக்கள் வெள்ளையின காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டம் மினியாபோலிஸில் தொடங்கி 50 அமெரிக்க மாநிலங்கள் மற்றும் சர்வதேச அளவில் நகரங்களில் வளர்ந்தன. [9]

குறிப்புகள்

தொகு
  1. "Mr. George Floyd Jr. - View Obituary & Service Information". Mr. George Floyd Jr. Obituary. Archived from the original on June 5, 2020. பார்க்கப்பட்ட நாள் June 5, 2020.
  2. Vagianos, Alanna (2020-06-09). "'He's Gonna Change The World': George Floyd's Family Remembers The Man They Lost". HuffPost (in ஆங்கிலம்). Archived from the original on June 11, 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-06-11.
  3. Vagianos, Alanna (2020-06-09). "'He's Gonna Change The World': George Floyd's Family Remembers The Man They Lost". HuffPost (in ஆங்கிலம்). Archived from the original on June 11, 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-06-11.
  4. Lance Scott Walker (2019). Houston Rap Tapes: An Oral History of Bayou City Hip-Hop. University of Texas Press. p. 83. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781477317938. Archived from the original on June 4, 2020. பார்க்கப்பட்ட நாள் June 4, 2020.
  5. "Murder charges filed against all four officers in George Floyd’s death as protests against biased policing continue". The Washington Post. July 3, 2020. https://www.washingtonpost.com/nation/2020/06/03/george-floyd-police-officers-charges/. 
  6. "Hennepin County ME Autopsy Report". Hennepin County. June 1, 2020. Archived from the original (PDF) on June 4, 2020. பார்க்கப்பட்ட நாள் June 4, 2020.
  7. "George Floyd death was homicide, says updated medical examiner's report". www.abc.net.au (in ஆஸ்திரேலிய ஆங்கிலம்). June 1, 2020. Archived from the original on June 2, 2020. பார்க்கப்பட்ட நாள் June 4, 2020.
  8. Wagner, Grace Hauck and Dennis. "George Floyd death: Experts say knee-to-neck restraint is dangerous, but Minneapolis allows it". USA TODAY (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on June 1, 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-06-23.
  9. Donaghue, Erin (May 29, 2020). "Mayor makes emotional call for peace after violent protests: 'I believe in Minneapolis'". CBS News. Archived from the original on May 29, 2020. பார்க்கப்பட்ட நாள் May 29, 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியார்ச்சு_பிளாய்டு&oldid=3861641" இலிருந்து மீள்விக்கப்பட்டது