சியோராஜ்வதி நேரு

சியோரஜ்வதி நேரு (பிறப்பு 1897 - இறப்பு 1955) இடைத்தேர்தலில் வெற்றி பெற்று 1953 முதல் 1957 வரை காங்கிரஸிற்காக உத்திரபிரேதேசத்தின் லக்னோவை (லோக்சபா தொகுதி) பிரதிநிதித்துவப்படுத்தினார். அவர் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உறவினர் என கருதப்படுகிறார். சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றும் உள்ளார். [1]

சியோராஜ்வதி , அலிகாரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். கிஷன் லால் நேருவை திருமணம் செய்து, பல்வேறு சமூக மற்றும் அரசியல் சேவையும் செய்துள்ளார்.

உத்திரப்பிரதேசத்தின் முதல் பெண் பாராளுமன்ற உறுப்பினரான இவர், லக்னோவின் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் உறுப்பினர் ஆவார். பெண்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள இவர், பெண்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு குழுக்களில் உறுப்பினராக, தலைவராக பணியாற்றியுள்ளார்.  ஹரிஜன் சகாயக் சங்கம், மகிளா சகாயக் சங்கம், அகில இந்திய பெண்கள் சங்கம் போன்றவைகளில் உறுப்பினராகவும் பாரத் சேவக் சமாஜ் தலைவராகவும் இருந்தார்.

அத்தோடு லக்னோவின் சிட்டி காங்கிரஸ், மகளிர் துணைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்த அவர், உத்தரப் பிரதேசத்தின் உணவு கவுன்சில் நிர்வாகக் குழுவிலும் இருந்தார்.

தேசிய இயக்கத்தின் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு, 1939 முதல் 1942 வரை கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசமும் அனுபவித்துள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Members Bioprofile". 164.100.47.132. Archived from the original on 2014-04-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியோராஜ்வதி_நேரு&oldid=3671089" இலிருந்து மீள்விக்கப்பட்டது