சிரக்கக்காவு பகவதி கோயில்

சிரக்கக்காவு பகவதி கோயில் இந்தியாவில் கேரளாவில் உள்ள பழமையான தேவி கோயில்களில் ஒன்றாகும்.[1]

இந்தக்கோயிலின் மூலவர் காளி தேவி ஆவார். அவர் திருகுணாத்மிகா எனப்படுகின்ற மூன்று வடிவங்களில் வழிபடப்படுகிறார். கொடுவல்லி ஆற்றில் சுயம்புவாக அம்மன் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு கோலத்திரி மன்னன் சிரக்கல் ராஜாவால் இக்கோயில் கட்டப்பட்டது. ஆதலால் இக்கோயில், சிரக்கக்காவு என்று புகழ் பெற்றது.

துணைத்தெய்வங்கள்

தொகு

இக்கோயிலில் குண்டூர் கோட்ட வானவர், இளங்கருமகன், பூதாடி ஆகியோர் ஒரே சன்னதியில் துணைத்தெய்வங்களாக உள்ளனர். நாலம்பலத்திற்கு வெளியில் கோயிலின் தென்மேற்கு மூலையில் நாகராஜா, நாககன்னிகா, சித்திரக்கூடம் ஆகியவற்றைக் கொண்ட சர்ப்பக்காவு எனப்படுகின்ற பாம்பிற்கான சன்னதி உள்ளது.

திருவிழா

தொகு

இக்கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மேடம் மாதத்தின் 9-12 நாட்களில் (ஏப்ரல் 22 முதல் 25 வரை) கொண்டாடப்படுகிறது. அடுத்து தெய்யம் மூன்று நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

முக்கியமான நாட்கள்

தொகு

சிங்கம்- உத்ராடம் - நீரா ஆகோஷம், நவராத்தி, சரசுவதி பூசை, கிரந்த பூசை, வாகன பூசை, வித்யாரம்பம், தனு 9- மண்டல பூசை - சுத்துவிளக்கு மகரம்- பிரதிஷ்டை தினம் மேடம் 9-12 விழா- திரா விழா உள்ளிட்டiவ முக்கியமான நாட்களாகும்.

திருப்பணி

தொகு

கோயில், சுமார் 800 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகின்றது. அண்மையில் கருவறை புதுப்பிக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டில் அஸ்தபந்த கலசத்துடன் அமைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு