சிரத்தா மறுவாழ்வு அறக்கட்டளை
சிரத்தா மறுவாழ்வு அறக்கட்டளை (Shraddha Rehabilitation Foundation) என்பது 1988 ஆம் ஆண்டில் இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் மும்பையை தளமாகக் கொண்ட மனநல மருத்துவரான மருத்துவர் பாரத் வட்வானியால் நிறுவப்பட்ட இலாப நோக்கற்ற ஓர் அமைப்பாகும் [1] மகாராட்டிராவின் இராய்கட் மாவட்டம் கர்ச்சத்தை தளமாகக் கொண்ட இந்த அறக்கட்டளையானது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்து, மீட்டெடுத்து, மீண்டும் அவர்களது குடும்பத்துடன் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வரலாறு
தொகு1988 ஆம் ஆண்டில், மனநல மருத்துவர்களான மருத்துவர் பாரத் வட்வானி மற்றும் சுமிதா வட்வானி ஆகியோர் தெருக்களில் அலையும் மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்றோருக்கான மறுவாழ்வு இல்லத்தைத் தொடங்க முடிவு செய்தனர். ஒரு சிறுவனின் அவலநிலையால் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன், நான் அவரை கவனித்துக் கொள்ள முடிவு செய்தேன். சிறுவனுக்கு சிகிச்சை அளித்த பிறகு, அவரது அடையாளத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவர் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் பட்டயமும் அறிவியல் இளையர் பட்டமும் பெற்றவராவார். அவரது தந்தை ஆந்திராவில் கண்காணிப்பாளராக இருந்தார் என்று மருத்துவர் பாரத் ஒரு செய்தித்தாள் கட்டுரையில் மேற்கோள் காட்டியுள்ளார்.[1]
பணிகள்
தொகுஅமைப்பு தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 8000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் மீண்டும் அவர்களது குடும்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். [1] [2] இலக்கை அடைய பல்வேறு தனிநபர்கள் மற்றும் வேல்யூலேப்சு போன்ற பெருநிறுவனங்களுடன் இந்த அறக்கட்டளை கைகோர்க்கிறது. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Indian Express
- ↑ 2.0 2.1 "10 mentally ill embark on journey of reunion". The Hindu. 19 March 2012.