சிராசுனா அணை
சப்பான் நாட்டிலுள்ள ஓர் அணை
சிராசுனா அணை (Shirasuna Dam) சப்பான் நாட்டின் குன்மா மாகாணத்தின் அமைந்துள்ளது. புவியீர்ப்பு வகை அணையாக 26.8 மீட்டர் உயரமும் 37.7 மீட்டர் நீளமும் கொண்டதாக சிராசுனா அணை கட்டப்பட்டுள்ளது. முக்கியமாக மின் உற்பத்தி பயன்பாட்டுக்காக இந்த அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 127.3 சதுர கிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும் போது இதன் பரப்பளவு சுமார் 7 எக்டேர்களாகும். 630 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1935 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1940 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1]
சிராசுனா அணை Shirasuna Dam | |
---|---|
அமைவிடம் | குன்மா மாகாணம், சப்பான். |