சிரின் எம். ராய்
சிரின் எம். ராய் (Shirin M. Rai பிறப்பு 1 டிசம்பர் 1960), [1] ஓர் அரசியல் விஞ்ஞானி, காலனித்துவத்திற்கு பிந்தைய ஆட்சியின் போதான, உலகமயமாதல்ஜனநாயகமயமாக்கல் செயல்முறைகள் மற்றும் பாலின ஆட்சிகள் ஆகியவற்றுக்கு இடையேயான குறுக்கீடுகள் பற்றிய ஆராய்ச்சிக்காகப் பரவலாக இவர் அறியப்படுகிறார். இவர் பாராளுமன்றத் திட்டத்தில் பாலின விழா மற்றும் சடங்கின் இயக்குநர் ஆவார், [2] இந்த நான்கு வருட இடைநிலைத் திட்டம், லெவர்கூல்ம் அறக்கட்டளையால் நிதியளிக்கப்படுகிறது, இது பிரிட்டிசு, இந்திய மற்றும் தென்னாப்பிரிக்கப் பாராளுமன்றங்களில் சடங்கு, விழா, சின்னம் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்கிறது.[3]
சிரின் எம். ராய் | |
---|---|
பிறப்பு | 1 திசம்பர் 1960 புதுதில்லி |
வாழிடம் | இலண்டன் |
பணியிடங்கள் | வார்விக் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | தில்லி பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | உலகமயமாதல்,ஜனநாயகமயமாக்கல் செயல்முறைகள் ,பாலின ஆட்சிகள் |
தாக்கம் செலுத்தியோர் | Foucault, Agamben, Hobsbawm & Ranger, Lukes |
ராய் சமூக அறிவியல் அகாதமியில் ஒரு சக ஊழியர் [4] மற்றும் இங்கிலாந்தின் வார்விக் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச ஆய்வுகள் துறையின் ஒரு பகுதியாகவும் பணியாற்றுகிறார். இவர் ஆலோசனை மற்றும் பொது உரையாடல் ஈடுபாட்டிற்காக ஐக்கிய நாடுகள் இவை தொடர்பான ஐக்கிய நாடுகள் வளார்ச்சித் திட்டம், பெண்கள் முன்னேற்றத்திற்கான பிரிவு, ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை மற்றும் ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவி நிறுவனம் மற்றும் உலக வங்கி ஆகிய சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார், [5] [6] . 2021 இல் இவர் பிரிட்டிசு அகாதமியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [7]
சுயசரிதை
தொகுசிரின் எம் ராய் இந்தியாவில் பிறந்தார் மற்றும் புது தில்லி உள்ள மாடர்ன் பள்ளியில் பயின்றார். 1982 இல் இந்து கல்லூரியில் அரசியல் அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார் , பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தில் பயின்றார், அங்கு இவர் 1984 இல் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் 1989 இல் முனைவர் பட்டம் பெற்றார். 1984-85 க்கு இடையில் இவர் தில்லி பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராக இருந்தார், பின்னர் வார்விக் பல்கலைக்கழகத்திற்கு (1989) சென்றார், அங்கு இவர் தற்போது அரசியல் மற்றும் சர்வதேச ஆய்வுகள் பேராசிரியர் பதவியை வகிக்கிறார்.
சிரின் எம். ராய் அரசியல் ஆய்வு சங்கம் போன்ற பல்வேறு தொழில்முறை சங்கங்களில் உறுப்பினராக உள்ளார் மற்றும் சர்வதேச ஆய்வுக் கழகத்தின் (2009–2011) நிர்வாகக் குழுவில் பணியாற்றியுள்ளார். [8] இவர் பெண்கள் வெளியீடுகளின் சர்வதேச கலைக்களஞ்சியம், ஜனநாயகமயமாக்கல், இந்தியப் பாலினப் படிப்பு, சர்வதேச பெண்ணிய இதழ், உலகளாவிய நெறிமுறைகள் போன்ற வெளியீடுகளின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றியுள்ளார்.
2017 ஆம் ஆண்டில், அரசியல் ஆய்வுகள் சங்கம் இவரது முனைவர் பட்ட ஆய்விற்கு பரிசு வழங்கியது. [9]
ஆராய்ச்சி
தொகுபாலினம் மற்றும் மேம்பாட்டுத் துறையில் சிரின் ராயின் ஆராய்ச்சி பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது ஆகும். இந்த ஆராய்ச்சி பகுதியில் பல கட்டுரைகள், கலைக்களஞ்சிய கட்டுரைகள் மற்றும் அத்தியாயங்களுடன் பல புத்தகங்களை இவர் எழுதியுள்ளார் மற்றும் திருத்தியுள்ளார். இவரது பணி மூன்று குறிப்பிட்ட பகுதிகளை உள்ளடக்கியது: ஜனநாயகமயமாக்கல், உலகமயமாக்கல் மற்றும் நிர்வாகம்.
பாலினம் மற்றும் மேம்பாடு குறித்த தனது பணிக்கு முன், சிரின் ராய் மாவோவுக்கு பிந்தைய சீனாவில் அரசியல் பங்கேற்பில் பணியாற்றினார். இவரது முனைவர் பட்ட ஆய்வில் இவர் உயர் கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தினார். முறைசாரா மற்றும் தினசரி பங்கேற்பு நடைமுறைகள், சர்வாதிகார ஆட்சிகளின் கொள்கை மூலம் செயல்படும் திறனை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் இதனால் இவர்களின் அதிகாரத்தை குறைத்து மதிப்பிடலாம் என்றும் பரிந்துரைத்தார். 1987 ஆம் ஆண்டில் சீனாவில் இவர் தனது களப்பணியைச் செய்தார், அங்கு இவர் பல்கலைக்கழகங்களில் பல மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் அதிகாரிகளை நேர்காணல் செய்தார.
சான்றுகள்
தொகு- ↑ "Rai, Shirin". Library of Congress. பார்க்கப்பட்ட நாள் 21 February 2015.
data sht. (b. 12-01-60)
- ↑ "Gendered Ceremony and Ritual in Parliament: About GRCP". University of Warwick. 13 December 2012. பார்க்கப்பட்ட நாள் 21 February 2015.
- ↑ Awards made in 2007: Direct awards: Research Programme Grants: Law, politics, international relations (pdf). The Leverhulme Trust. 2007. p. 1. பார்க்கப்பட்ட நாள் 21 February 2015.
University of Warwick: Professor Shirin Rai - Gendered Ceremony and Ritual in Parliaments: Disciplining Representation £877,017
[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "Fellows: A-Z list: R". Academy of Social Sciences. பார்க்கப்பட்ட நாள் 21 February 2015.
- ↑ "Panelists for the forty-third session of the Commission on the Status of Women (CSW43)". United Nations WomenWatch. March 1999. பார்க்கப்பட்ட நாள் 21 February 2015.
Panelists for the forty-third session of the Commission on the Status of Women (CSW43)
- ↑ World Bank.
- ↑ "Professor Shirin Rai FBA". The British Academy (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-23.
- ↑ International Studies Association Governing Council Meeting Archive, 2011.
- ↑ "New PSA Prizes and Awards framework | the Political Studies Association (PSA)".