காலை பல்துலக்கும் துலப்பானிலிருந்து இரவில் படுக்கும் [[பாய்]] வரை நாம் அன்றாடம்அன்றாட பயன்படுத்தும் பெரும்பாலான பொருள்கள் எல்லாமே நெகிழிப் பொருள்கள் தான். நெகிழிப் பயன்பாட்டில் நாடுகள் பட்டியலில் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்கா]], [[சீனா]], [[இந்தியா]] ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளன. [[இரப்பர்]], [[கண்ணாடி]], [[இரும்பு]], [[அலுமினியம்]], [[மரம்]] போன்றவற்றால் செய்யப்பட்ட பொருட்களுக்கு மாற்றாக இன்று நெகிழிப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் பல்லாயிரம் டன் கணக்கில் பாலித்தீன் தயாரிக்கப்படுகிறது.