'''ஓதுவார்''' என்போர் [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] உள்ள [[சைவம்|சைவ]] சமய ஆலயங்களில் [[தேவாரம்|தேவார]] [[திருவாசகம்|திருவாசக]]ப் பண்களைப் பாடும் பணியில் தம்மை அர்ப்பணித்த இறைத்தொண்டர்கள் ஆவார். முற்காலத்தில் மன்னர்கள் ஓதுவார்களுக்கு நிலம் அளித்து ஆதரித்தனர். பரம்பரை பரம்பரையாக ஓதுவார்கள் திருமுறைப் பண்களைப் பாடி வந்தனர். காலப்போக்கில் இந்நிலை மாறி ஓதுவார் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே தமிழக அரசு சென்னை, [[மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்]]<ref>{{cite news| url=http://www.dinamani.com/edition_madurai/madurai/2015/12/03/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0/article3158844.ece | title=மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஓதுவார் பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை | work=தினமணி | date=3 திசம்பர் 2015 | accessdate=7 மே 2016}}</ref> மற்றும் [[பழனி முருகன் கோவில்]]<ref>{{cite news | url=http://tamil.webdunia.com/article/employment-opportunities/%E0%AE%93%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-108091200056_1.htm | title=ஓதுவார் பயிற்சிக்கான சான்றிதழ் படிப்பு! | work=வெப்துனியா.கொம் | accessdate=7 மே 2016}}</ref> ஆகிய இடங்களில் ஓதுவார் பயிற்சி மையங்களைத் துவங்கியது. இம் மையங்களில் சேர்ந்து பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கையும் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே உள்ளது.
ஓதுவார் அல்லது ஓதுவாமூர்த்திகள் என்போர் சைவ சமய ஆலயங்களில் தேவார, திருவாசக, திருமுறைகளை பண்ணோடு பாட தங்களை அர்ப்பணித்துக் கொண்ட முதல் தொண்டர்கள் ஆவர். பழங்காலம் முதலே மன்னர்கள் பலரும் இவர்களுக்கு நிபந்தங்கள், மானியங்கள் கொடுத்து பதிகம் பாடச் செய்த செய்தி கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் காணப்படுகிறது. திருக்கோயில்களில் பூஜை முறைகளைப் பொறுத்து இறைவன் திருமுன்பு பன்னிரு திருமுறைகள், பஞ்சபுராணம், திருப்புகழ் போன்ற பாடல்களை பண்முறையோடு பாடும் தொண்டர்கள் இவர்களே ஆவர். கிபி 3ஆம் நூற்றாண்டு காரைக்கால் அம்மையார் காலம் இவர்களின் பண்ணிசை மரபுக்கு ஆணிவேர் எனலாம். அதனை தொடர்ந்து 6,7,8,9 நூற்றாண்டுகளில் சைவ சமய ஆச்சாரியர்கள் ஆகிய திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் உள்ளிட்ட அருளாளர்கள் பாடிய அருளிய திருப்பதிகங்களை அவர்கள் காலம் முதலே கர்ண பரம்பரையாக கேட்டு ஓதுவார்கள் பாடி வந்துள்ளனர். மாமன்னன் ராஜராஜ சோழன் தில்லை திருத்தலத்தில் தேவாரத்தை மீட்டு நம்பியாண்டார் நம்பிகள் உதவியுடன் திருமுறைகளாக வகைப்படுத்தினார் என்று திருமுறை கண்ட புராணம் கூறுகிறது. அதன்பின் இறைவன் அசரீரிப்படி எருக்கத்தம்புலியூர் என்ற ஊரில் பாணர் மரபில் வந்த பெண்ணின் துணை கொண்டு, மூவர் பாடிய அதே பண்ணில் வகைப்படுத்தி பண்ணடைவு செய்வித்தார் மாமன்னன் ராஜராஜ சோழன். மேலும் பல காலத்தால் முற்பட்ட பனுவல்கள், பிற்கால அருள் நூல்கள் போன்றவற்றையும் சேர்த்து திருமுறைகள் பன்னிரண்டாக பிற்காலத்தில் முழுமை பெற்றது. இறைவனுக்கு பூஜையின் போது வேதம், ஆகமம் போன்ற உபசாரங்களை தொடர்ந்து, செந்தமிழ் வேதமாகத் திகழும் திருமுறைகளை ஓதுவாமூர்த்திகள் பாடிய பிறகு பூஜை முழுமை பெறுகிறது. இறைவனின் அபிஷேக நேரங்கள், கால பூஜைகள், உற்சவ நாட்கள் வீதி பாராயணம், கும்பாபிஷேகங்கள் மேலும் பல சமய நிகழ்வுகளிலும் திருமுறைகளைப் பாடும் உரிமை பெற்றவர்கள் ஓதுவாமூர்த்திகள். திருக்கோயில்களில் விடியற்காலை திருப்பள்ளி எழுச்சி முதல், இரவு அர்த்த ஜாம பூஜை பொன்னூஞ்சல் வரை இந்த ஓதுவார்கள் இறைவன் புகழை பணிசையோடு பாடி உலக நன்மை நீடிக்க பிரார்த்திக்கின்றனர். இவர்களின் பாடல்களில் மனமகிழ்ந்த இறைவன், அந்த நாள் முழுவதும் உலக உயிர்களின் இடர்களை தீர்த்து இன்பம் தருகிறான். என கூறப்படுகிறது.
== காண்க ==
== ஓதுவாமூர்த்திகள் வரலாற்று பார்வை ==
{{வலைவாசல்|சைவம்|boxsize=50}}
சோழ அரசர்கள் உள்ளிட்ட அரச மரபிற்கு பின்வந்த ஓதுவார்கள் பெயர், வாழ்ந்த காலம் என வரலாற்று ரீதியாக இங்கே வரிசை படுத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
== மேற்கோள்கள் ==
'''பொன்னோதுவார் பரம்பரை'''
திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஒன்பதாவது குருமா சன்னிதானம் ராமலிங்க தேசிகர் அவர்கள், திருமழபாடியில் வசித்து வந்த ஓதுவார்கள் குடும்பத்தினரை 1658 இல் திருவாவடுதுறைக்கு அழைத்து வந்தார். அவர் அம்மையப்ப பண்டார ஓதுவார் (1658) ஆவார். அவர் காலம் முதல் வாழையடி வாழையாக திருவாவடுதுறையில் ஓதுவார்கள் பரம்பரை இருந்து வருகின்றனர். அப்ப பரம்பரையில் வந்தவரே புகழ்பெற்ற பொண்ணுதுவார் ஆவார். மறைவு (1935) (திருவாவடுதுறை ஆதீன குறிப்பு)
'''சாலிவாடீஸ்வர ஓதுவார்'''
1770களில் காஞ்சிபுரத்திலிருந்து திருநெல்வேலிக்கு ஒரு ஓதுவார் குடும்பம் குடியேறியது. அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் வீரவாகு ஓதுவார், ஆறுமுக ஓதுவார் என்பவர்கள் ஆவர். இவர்கள் வழிவந்தவர்கள் தான் சுந்தரபாதுவாமூர்த்தியின் தந்தையார் சாலிவாடீஸ்வரர் ஓதுவாமூர்த்தி அவர்கள் .
'''அக்னி ஓதுவார் அலங்கார ஓதுவார் பரம்பரை'''
திருநெல்வேலி பகுதியில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் 200 ஆண்டுகளுக்கு முன் சாரங்கி வாசிக்கக்கூடிய சுப்பையா ஓதுவார் இருந்தார். அவர் காலம் 1805 ஆக இருக்கலாம். வழிவழியாக இன்று வரை ஓதுவராக பணியாற்றி வருகின்றனர். அப்பரம்பரையில் வந்த மகாராஜா ஓதுவார் என்பவர், தென்காசி திருக்கோயிலில் பணியாற்றினார். நெல்லையில் அக்னி ஓதுவார் பரம்பரையில் நெல்லை திருக்கோவிலில் வைத்தியலிங்க தேசிகர் 25/4/1952ல் பணியாற்றி வந்தார். இவருடைய தாத்தா காந்திமதி நாத குருக்கள் (மறைவு 1950) வரை கணிக்க முடிகிறது இவருடைய முன்னோர்கள் கையில் அக்கினி சட்டி தாங்கி வேத பட்டரிடம் கொடுத்ததாக வரலாறு. நெல்லையில் அலங்கார ஓதுவார் பரம்பரையில் சங்கரசுப்பிரமணியன் என்பவர் இருக்கிறார். நான்கு தலைமுறைகளுக்கு முன்னால் வடக்கிலிருந்து வந்தவர்கள் இவை பற்றி எல்லாம் விரிவாக ஆராய வேண்டும்.
'''திருச்சங்காட்டங்குடி பரம்பரை'''
1926 இல் பிறந்த திருச்சங்காட்டங்குடி தியாகராசா தேசிகரின் தந்தை தாத்தா அனைவரும் ஓதுவா மூர்த்திகளே தந்தை பிறந்த 25 ஆண்டு அதன் முன் தாத்தா பிறந்தது 25 ஆண்டு என்று வைத்துக் கொண்டால் உன் பின்னாக இருக்கலாம் 1876 இல் பிறந்திருக்கலாம் அவருடைய முன்னோரும் ஓதுவார் என்று சொல்லப்படுகிறது .
'''சோழபுரம் செட்டியார் பரம்பரை'''
குழந்தையில் சோழபுரம் செட்டியார் பரம்பரையில் கே மருதநாயகம் திருப்பைஞ்ஞீலி ஓதுவாராக பணியாற்றினார். இவரது தந்தையார் கந்தசாமி செட்டியார் 1990 இல் தனது 82 ஆவது வயதில் மறைந்திருக்கிறார் அவ்வாறாயின் அவர் 198ல் பிறந்திருக்க வேண்டும் அவரது தந்தையார் உத்தண்டி செட்டியாரும் ஓதுவாமிர்திகளை 20 வயதில் கந்தசாமி செட்டியார் பிறந்ததாக கொண்டால் 1888ல் அவர் பிறந்திருக்கலாம் .
'''ஆறுமுக ஓதுவார் காலம்'''
1893 திருச்செந்தூர் தமிழ் வேத பாடசாலை தொடங்கப்பட்டது அங்கே சோமசுந்தர உபாத்தியாயர் என்பவர் தேவாரம் கற்பித்து வந்தார் அவரிடம் ஆறுமுக ஓதுவார் 195 இல் பாடம் கேட்டுள்ளார் அதற்கு முன் சோமசுந்தர உபாத்தியாயர் 1888 அல்லது 1875 ஆக இருக்கலாம் ஆறுமுகம் ஓதுவாரின் மகனார் திரு சங்கரன் ஓதுவார் இத்தகவலை கடிதம் மூலம் எழுதி அனுப்பினார். ஆறுமுக ஓதுவார் காலத்தில் திருச்செந்தூரில் வாழ்ந்த ஓதுவ மூர்த்திகள் வருமாறு விநாயக ஓதுவார், சூரியன் ஓதுவார், சுப்பையா ஓதுவார் ,குமாரசாமி ஓதுவார் ,சங்கர ஓதுவார் ,செந்தில் நாயக ஓதுவார், சண்முகசுந்தரம் ஓதுவார்,வீரவாகு ஓதுவார் சங்கர சுப்பு ஓதுவார்.
'''வேறு சில பரம்பரை ஓதுவார்கள்'''
ஆவுடையார் கோயிலில் பணியாற்றும் உமாபதி ஓதுவார் பிறப்பு 1963 அவரின் தந்தை சோமசுந்தர ஓதுவார் பாட்டனார் நடராஜ ஓதுவார் கொள்ளுப்பாட்டனார் அப்பாதுரை ஓதுவார் என நான்கு தலைமுறைகளாக ஓதுவாமூர்த்திகளாக இருந்திருக்கின்றனர் தலைமுறைக்கு 20 ஆண்டு என வைத்துக்கொண்டால் அப்பாதுரை ஓதுவார் இன் காலம் 193 பிறப்பு என இருக்கலாம் .
'''வரலாறு வரையறுக்கப்படாத ஓதுவார்கள்'''
1903 சிதம்பரம் சி பழனியப்ப முதலியார் தேவார பாடசாலை தொடங்கப்படுகின்றது அப்பாட சாலையில் ஆசிரியராக நடராஜபோதுவர் பொறுப்பேற்றார் அவர் பிறந்த ஆண்டு சரியாகத் தெரியவில்லை 1883 க்கு முன் இருக்க வேண்டும் அடங்கன் முறை ஐயா அருணாச்சல தேசிகரின் 1894 1906 தந்தை கணபதி தேசிகரின் தோற்றம் 1874க்கு முன் இருக்க வேண்டும் கீழ்வேளூர் சொக்கலிங்கம் ஐயா மறைவு 1928 என சிவனேசன் இதழ் தெரிவிக்கிறது 1898க்கு முன் அவர் பிறந்திருக்க வேண்டும்.
1903 சிதம்பரம் முதலியார் பாடசாலை த தொடங்கப்படும் முன்பே சிதம்பரம் விழாவில் திருவிடைமருதூர் நாகலிங்கம் பிள்ளை கலந்து கொண்டதாக பாடசாலை பொன்விழா மலர் கூறுகிறது அந்த திருமுறை கோஷ்டிகளை கேட்டு அனுபவித்தலையே பழனியப்ப முதலியார் தேவார பாடசாலை தொடங்கினார் என்று பொன்விழா மலர் குறிப்பிடுகிறது எனவே திருவிடைமருதூர் நாகலிங்கம் பிள்ளை காலம் 1883 க்கு முன் இருக்க வேண்டும் நாகலிங்கம் பிள்ளை மிக அருமையாக பாடுவாரா திருத்தங்களை பாடுவதில் வல்லவர் திருவாவடுதுறை ஆதின ஓதுவ மூர்த்திகளாக இருந்தவர்.
அக்காலகட்டத்தில் திருவிடைமருதூர் நாகலிங்கம் பிள்ளை குரங்காடுதுறை சுப்பிரமணிய தேசிகர் கீழ்வேளூர் சொக்கலிங்க தேசிகர் திருவாரூர் குருசாமி தேசிகர் அரசன் குல தெரு சுப்பையா தேசிகர் திருவாரூர் சுந்தர குருக்கள் முதலான சிலர் வாழ்வு தேவாரத்திற்கென்றே அளிக்கப்பட்டன நாட்டிலும் மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் போன்ற ஞானானுபூதி மகா சன்னிதானங்கள் இவர்களைப் போற்ற தலைப்பட்டனர் இவர்கள் இசை பெருமை தெய்வத்தமிழ் வளம் செந்தமிழ்நாட்டில் பரவித்து இதனை பலகாரம் பார்த்து அனுபவித்தவர் தமது பழனியப்ப முதலியார் அவர்கள் என்கிற மகாவித்துவான் தண்டபாணி தேசிகர் எனவே மேலே குறிப்பிட்ட ஓதுவாமூர்த்திகள் சமகாலத்தவர்களாக இருக்கக்கூடும் .
'''வரலாறு வரையறுக்கப்பட்ட ஓதுவார்கள்'''
1894 -1910 இனி வரலாறு வரையறுக்கப்பட்ட நிலையில் உள்ள ஓதுவார்களை பற்றி சிந்திப்போம் அடங்கன் முறை ஐயா திரு அருணாச்சல தேசிகர் 1894 நெல்லை திரு சுந்தர ஓதுவாமூர்த்தி 1892 திருவிடைமருதூர் திரு நடராஜ தேசிகர் 1900 கீழ் பெரும் பள்ளம் சம்பந்தம் பிள்ளை 1907 தண்டபாணி தேசிகர் 1908 வேலாயுத ஓதுவார் 1910 ஆகியோர் இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தியில் தோன்றினார்கள் அடங்கன் முறை ஐயா திரு அருணாச்சல தேசிகருக்கு அடங்கன் முறை முதல் ஏழு திருமுறைகள் அனைத்து பாடல்களும் மனப்பாடம் உண்டு எந்த பாட்டில் எந்த வரி சொன்னாலும் பாடக்கூடியவர்கள் திரு சுந்தர ஓதுவாமூர்த்தி சிதம்பரம் கனகசபைப்பிள்ளை திருமுறை உலகில் மிகவும் புகழ் பெற்றவர்கள் அடங்கன்முறை அருணாச்சல தேசிகர் திருவிடைமருதூர் நடராஜ தேசிகர் விருத்தாச்சலம் சுவாமிநாத முதலியார் கீழ்பெரும்பள்ளம் சம்பந்தம் புள்ளை வேலாயுத ஓதுவார் ஆகியோர் மிகச் சிறந்த ஆசிரியர்கள் ஆவார்கள் நூற்றுக்கணக்கான புகழ்பெற்ற ஓதுவார்களை உருவாக்கினார்கள் .
'''1911 முதல் 1920 வரை'''
இக்காலகட்டத்தில் பிறந்த ஓதுவா மூர்த்திகள் திருக்களர் ரத்தினசபாபதி தேசிகர் 1922 தருமபுரம் சுவாமிநாதன் 1923 திருக்களர் சுந்தரேச தேசிகர் 1923 சைதை நடராஜன் 1924 தா அருணாசல தேசிகர் 1924 சைதை பாலசுந்தரம் 1924 தூம சுந்தர தேசிகர் 1926 திருவாவடுதுறை எண் சோமசுந்தர தேசிகர் 1926 திருச்செங்காட்டங்குடி திரு தியாகராஜ தேசிகர் 1926 லால்குடி திரு எம் ஸ்வாமிநாதன் 1928 வைத்தீஸ்வரன் கோயில் திரு தண்டபாணி தேசிகர் 1926 திருக்களர் ரத்தின சபாபதி தேசிகர் 1930
'''1931 முதல் 1940 வரை'''
இக்காலகட்டத்தில் பிறந்த ஓதுவாமூர்த்திகள் திரு கோ ரத்தினசபாபதி ஓதுவார் 1931 திரு விஸ்வநாத ஓதுவார் 1932 திருவெண்காடு தண்டபாணி தேசிகர் 1933 வேதாரண்யம் முத்துக்குமார சுவாமி தேசிகர் 1934 காஞ்சி சி பரத ஓதுவார் 1934 மதுக்கூர் திரு எஸ் ஞானப்பிரகாசம் 1935 திருக்கழுக்குன்றம் நான் ஆறுமுக ஓதுவார் 1937 திருவிடைமருதூர் திரு சம்பந்த தேசிகர் 1938 திரு சி கபாடி ஓதுவார் 1938 சீர்காழி திரு எஸ் திருஞானசம்பந்தம் 1939 திரு மா பாலசுப்பிரமணியம் 1940
'''1941 முதல் 1955 வரை'''
இக்காலகட்டத்தில் பிறந்த ஓதுவாமூர்த்திகள் சிதம்பரம் திரு து சண்முகசுந்தரம் 1941 திருத்தணி திரு என் சுவாமிநாதன் 1945 தருமபுரம் திரு எஸ் ஞானப்பிரகாசம் 1945 திருக்களர் திரு நாகநாத தேசிகர் 1949 சாமி தண்டபாணி ஓதுவார் 1955
== ஓதுவார்களின் சிறப்பு ==
{{reflist}}
'''திருச்சிற்றம்பலம்'''
""''திருப்பதிகம் விண்ணப்பம் செய்வார்"''
""''பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்"''
என்று சுந்தர மூர்த்தி சுவாமிகளின் திருவாக்கில் மலர்ந்த, ..இறைவனுக்கு இசைத்தொண்டு புரியும் , திருப்பதிகம் விண்ணப்பம் செய்யும் ஓதுவாமூர்த்திகள் பற்றிய பதிவு இது.
ஞானசம்பந்தப்பிள்ளையார் அவதரித்த தலமாகிய தருமையாதீனத்தின் திருக்கோயிலாகிய சீர்காழிப்பதியிலே அருள்நிறை தோணியப்பர் ஆலயத்தில் வெளிப்பட்ட சைவப் பெரும் புதையலில் கிடைத்த பண் குறிக்கப்பட்ட தேவார செப்பேடுகளை சைவ உலகமே இன்று மகிழ்ந்து கொண்டாடிவருகிறது.
இந்நிலையில் ஆயிரம் ஆண்டு தொடர்ச்சியாக மரபுவழியாக தேவாரப்பதிகங்களை பண்ணோடு இசைத்து பேணி பாதுகாத்து அதன் மூலம் தமிழுக்கும் ,சைவத்திற்கும், தமிழிசைக்கும் அருந்தொண்டாற்றிவரும் ஓதுவாமூர்த்திகள் பற்றி இவ்வேளையில் சிந்தித்தல் அவசியம்.
ஆலயங்கள் அமைத்து இறை வழிபாடு என்று தோன்றியதோ அன்றுமுதல் இன்றுவரை ஆலயங்களில் பண்ணோடு பாடும் முறை தமிழர்கள் வழிபாட்டு முறையில் இன்றியமையாது விளங்குகிறது. வழிபாட்டில் இசையானது இடம்பெற்றுள்ளதை சங்க இலக்கியங்கள் முதற்கொண்டு காப்பியங்கள், புராணங்கள் ,பக்தி இலக்கியங்கள் என அனைத்து இலக்கியங்களிலும் காணலாம்.
பக்தி இலக்கிய காலம் என அழைக்கப்படும் பல்லவர் காலத்தில் அருளாளர்கள் தோன்றி தமிழோடு இசை பாடி சைவத்தில் தேவாரப்பதிகங்களும்,வைணவத்தில் பாசுரங்களும் அருளினார்கள்.
தேவாரமுதலிகளான ஞானசம்பந்தர் திருநாவுக்கரசர், சுந்தரர் பெருமான்.ஆகியோர் திருத்தலங்கள் தோறும் சென்று அத்தலங்கள் மீது பதிகங்கள் பாடியருளினார்கள். அன்றுமுதலே தேவாரப்பதிகங்களை தலங்களில் வழிபாடுகளில் பாடும் முறை ஏற்பட்டது. இதற்கு பல்லவ மன்னர்கள் பல நிவந்தங்கள் அளித்து போற்றினர் .
தேவாரம் பாடியவர்களை “ திருப்பதியம் விண்ணப்பம் செய்வார் என அழைக்கப்பட்டனர்.
பல்லவ மன்னனாகிய நந்திவர்ம பல்லவ மன்னனது 17ம் ஆட்சியாண்டில் (கி.பி.845) திருவல்லம் திருக்கோயிலில் பொறிக்கப்பட்ட கல்வெட்டொன்றில்
“திருப்பள்ளித்தாமம் பறிப்பார்க்கும் திருப்பதிகம் பாடுவருளிந்த பலபணி செய்வார்க்கு நெல்லு நானூற்றுக்காடியும் .
என்ற கல்வெட்டு மூலம் பல்லவர்காலத்திலேயே கோயில்களில் தேவாரம் ஓதுவதற்கு ஓதுவார்களை நியமித்து நிவந்தம் வழங்கிய முறை இருந்த செய்தியை அறியமுடிகிறது.
முற்சோழர் காலத்தில் திரு எறும்பியூர், பழுவூர், திருவாவடுதுறை, அந்தநல்லூர், வயலூர், ஆத்தூர், முதலிய தலங்களில் உள்ள திருக்கோயில்களில் திருப்பதிகங்கள் பாடப்பட்டுள்ளன,
முதலாம் இராஜராஜர் காலத்திலும் அதற்கு பிற்பட்ட காலத்திலும் ஏறத்தாழ தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும். திருப்பதிகங்கள் பாடப்பட்டு வந்தன
சோழர்காலத்தில் திருப்பதிகம் பாடியவர்கள் பிடாரர்கள் என்று அழக்கப்பட்டு வந்தனர்.
தஞ்சைப் பெருங்கோயிலில் நாற்பத்தெட்டு பிடாரர்கள் நியமிக்கப்பட்டனர் இவர்கள் அனைவருமே சிவதீட்சை பெற்று சிவன் என்று முடியுமாறு பெயர் கொண்டுள்ளனர் . கல்வெட்டில் இவர்களது ஊர்பெயரும், இயற்பெயரும், தீட்சை பெற்ற பெயரும் குறிக்கப்பட்டுள்ளது.
இவர்களுள் பாலன் திருவாஞ்சியத்தடிகளான இரசராசபிச்சனான சதாசிவன், திருவெண்ணாவல் செம்பொற்சோதியான தஷிணவிடங்கப் பிச்சனான ஞானசிவன், அரையன் அணுக்கன் திருமறைக்காடனான தர்மசிவன் ஆகியோர் தலைமைப்பாடகராக இருந்துள்ளனர்.
இவர்களுக்கு பக்க வாத்தியமாக உடுக்கை, கொட்டி மத்தளம் வாசிக்க கலைஞர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
சோழர்காலத்தில் பல கல்வெட்டுக்களில் திருமுறை விண்ணப்பம் செய்ய பிடாரர்களை நியமித்த செய்தி நிறைந்து கிடக்கிறது. (அவற்றை தனியான ஒரு கட்டுரையில் விரிவாக எழுதுகிறேன். )
திருமுறை பாடிய மண்டபம் “திருமுறை கைக்கோட்டி மண்டபம் என்று அழைக்கப்பட்டது.
திருமுறை ஏடுகளை பாதுகாக்க விரகர் என்போர் பணியமர்த்தப்பட்டனர்.
திருமுறை பாடுவோரை கண்காணித்து தலைமைப்பாடகராக விளங்கியவர் “ தேவார நாயகம் “என அழைக்கப்பட்டனர்.
தாராசுரம் ஐராவதீசுவரர் ஆலயத்தில் திருப்பதிகம் பாடும் நுற்றியெட்டு பிடாரர்களின் சிலைகள்
அவர்களின் பெயர்களோடு உள்ளன . (இவை பிடாரர்கள் சிலை என்று அறிவித்தவர் குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்கள். )
குலசேகரப்பட்டினம் சிவன் கோவிலில் நான்கு ஓதுவார்களின் சிலைகளும் அவர்களது பெயர்களும் உள்ளது.
சோழர்காலத்தின் பின்புதான் திருப்பதிகம் பாடுவோரை ஓதுவார் என்றும் ஓதுவாமூர்த்திகள் என்றும் அழைக்கும் முறை ஏற்பட்டது. இவர்களை பண்டாரம் என்றும் அழைக்கும் முறை இருந்துள்ளது.
நாயக்கர் காலத்திலும் ஓதுவார்களுக்கு நிவந்தங்கள் அளிக்கப்பட்டு ஆலயங்களில் திருமுறை விண்ணப்பம் செய்யப்பட்டன.
திருமலை நாயக்கர் காலத்தில் மதுரை ஆலயத்தில் திருமுறைப்பணி செய்வதற்கு அலங்கார ஓதுவார் மரபில் வந்த தாண்டவமூர்த்தி ஓதுவாருக்கு நாயக்க மன்னர் ‘ஓதுவார் செங்குளம் என்ற கிராமத்தை நிவந்தமாக சாசனம் செய்து கொடுத்துள்ளார் இன்றும் அந்த பரம்பரையில் உள்ளவர்களே மதுரை ஆலயத்தில் பணி செய்து வருகிறார்கள் சமீபத்தில் சிவனடி எய்திய மதுரை குருசாமி தேசிகர் இந்த பரம்பரையின் 18 வது தலைமுறையை சேர்ந்தவர் ஆவர்.இந்தகுடும்பத்தினரிடம் நாயக்க மன்னர் அளித்த செப்புப்பட்டயம் இன்றும் உள்ளது.
இன்றுள்ள ஓதுவார் பரம்பரையில் நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது மதுரை குருசாமி தேசிகர் பரம்பரையாகும்.
அடுத்த நீண்ட மரபினைக்கொண்டது திருவாவடுதுறை பொன்னோதுவார் மரபு. திருவாவடுதுறை ஆதீனத்தில் தலைமுறையாகப் திருமுறைப்பணி செய்தவர்கள். இவர்களிடம் தேவார பண்களுக்கிணையான இராகக்குறிப்புகள் அடங்கிய ஓலைச்சுவடிகள் இருந்தன தமிழிசைச்சங்கத்தின் பண்ணாராய்ச்சி மாநாடுகளில் இவை ஆய்வுசெய்யப்பட்டன.
இந்த மரபில் வந்த மாணிக்க ஓதுவார் என்பவரே இந்தியா சுதந்திரம் பெற்றபோது திருவாவடுதுறை ஆதீனம் சார்பாக சென்று செங்கோல் அளிக்கப்பட்ட போது ‘வேயுறு தோளி பங்கன் “ என்ற பதிகத்தினை பாடியவர் ஆவார்.
<nowiki>*</nowiki>திருநெல்வேலி சாலிவடீசுவர ஓதுவார்
,*அடங்கன் முறை அருணாசல தேசிகர்,
<nowiki>*</nowiki>விருத்தாச்சலம் சாமிநாதமுதலியார்.
<nowiki>*</nowiki>திருக்களர் சுப்பையா தேசிகர், சுந்தரேச தேசிகர், ரத்னசபாபதி தேசிகர்
<nowiki>*</nowiki>குலசேகரப்பட்டினம் அப்பாசாமி ஓதுவார்
<nowiki>*</nowiki>M.M.தண்ட பாணி தேசிகர்
<nowiki>*</nowiki> சிதம்பரம் கனகசபைப்பிள்ளை, ரத்னம் பிள்ளை சகோதரர்கள்
<nowiki>*</nowiki> திருவாவடுதுறை விஸ்வலிங்கம் சபாபதி சகோதரர்கள்.
<nowiki>*</nowiki>தருமபுரம் வேலாயுத ஓதுவார்,
<nowiki>*</nowiki>மதுரை சுப்பிரமணிய முதலியார்
<nowiki>*</nowiki>திருக்கடையூர் சாமி ஐயா தேசிகர்
திருவாவடுதுறை *சோமசுந்தர தேசிகர்
<nowiki>*</nowiki>தேவூர் சந்திரகாச தேசிகர்
<nowiki>*</nowiki>பழனி குமாரசுவாமி தேசிகர்
<nowiki>*</nowiki>திருப்புகலூர் அருணாசல தேசிகர்.
<nowiki>*</nowiki> திருச்செங்காட்டங்குடி தியாகராஜ தேசிகர் .
<nowiki>*</nowiki>இஞ்சிக்குடி சொக்கலிங்க தேசிகர்
<nowiki>*</nowiki>பண்ருட்டி ராஜசேகரன்
<nowiki>*</nowiki>தருமபுரம் சுவாமிநாதன்
<nowiki>*</nowiki>திருத்தவத்துறை( லால்குடி) சுவாமிநாதன்
<nowiki>*</nowiki> திருமறைக்காடு முத்துக்குமாரசுவாமி தேசிகர்
<nowiki>*</nowiki> சீர்காழி திருஞான சம்பந்த ஓதுவார்
<nowiki>*</nowiki>மதுக்கூர் ஞானப்பிரகாசம் ஓதுவார்
<nowiki>*</nowiki>நெய்வேலி இராமச்சந்திரன் ஓதுவார்
<nowiki>*</nowiki>மதுரை பொன் முத்தையா ஓதுவார்
ஆகிய ஓதுவாமூர்த்திகளும் ,இன்னும் பலரும் , கடந்த நூற்றாண்டுவரை மரபுவழியாக திருமுறை ஓதும் பணி செய்தவர்கள் , இன்றும் இவர்கள் வழி வந்த மரபினரே திருமுறைப்பணி செய்துவருகிறார்கள்.
தற்காலம் முதுபெரும் ஓதுவா மூர்த்திகளாக திகழ்பவர்கள்
திருப்பனந்தாள் முத்துக்கந்த ஓதுவாமூர்த்திகள்,
சிதம்பரம் ஞானப்பிரகாச ஓதுவார்
திருத்தணி சுவாமிநாத ஓதுவார்,
வயலூர் திருஞானசம்பந்த ஓதுவாமூர்த்திகள்,
பழனி சண்முக சுந்தர ஓதுவார்
திருப்பரங்குன்றம் திருஞானசம்பந்த ஓதுவார்,
சுப்பிரமணிய ஓதுவார்
லண்டன் சுவாமி தண்டபாணி ஓதுவார்
சிங்கப்பூர் வைத்தியநாத ஓதுவார்.
இவர்களின் மரபு வழி வந்த ஓதுவார்களே தற்காலம் பணியில் இருப்பவர்கள்.
பழனி வெங்கடேச ஓதுவார்
கரூர் சுவாமிநாதன் ஓதுவார்
மயிலை சத்குரு ஓதுவார்,
வயலூர் முனைவர் திருஞான. பாலச்சந்தர் ஓதுவார்
மதுரை பொன்.முத்துக்குமரன் ஓதுவார்
மயிலாடுதுறை சோ.சிவகுமார் ஓதுவார்
கரிவலம் வந்தநல்லூர் திருமுருக.சுந்தர் ஓதுவார்
லோக.வசந்தகுமார் ஓதுவார்
நெய்வேலி சிவராசுபதி ஓதுவார்
சிவகாசி ரமேஸ் ஓதுவார்
ஆகியோருடன்
இன்னும் பல இளம் ஓதுவார்களும் தற்காலம் திருமுறை ஓதும் பணியில் இருக்கும் ஓதுவாமூர்த்திகள் ஆவர்.
'''ஓதுவாமூர்த்திகளின் பெருமைகள்'''
சங்ககாலம் முதல் பாணர், பாடினி, விறலியர், பொருநர், கிணையர், கோடியர், வயிரியர், கூத்தர், மாகதர்கள் போன்ற பல்வேறு தமிழ் இசைக்கலைஞர்கள் வாழ்ந்த தமிழகத்தில் எஞ்சி இருப்பவர் சோழர் காலத்தில் பிடாரர் என்று அழைக்கப்பட்ட ஓதுவார்கள் தான் தற்காலம் எஞ்சியிருக்கும் தமிழிசைக்கலைஞர்கள்
ஆயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட ஒரு மரபுத்தொடர்ச்சியாக பண்ணிசைப்பணி செய்யும் மரபு உலகில் வேறு எந்த இனத்திலும் கிடையாது.
தொன்மையான தமிழிசை மரபினை இன்றுவரை அதன் இயல்பு மாறாது காத்து வருபர்கள் ஓதுவார்கள்.
அண்ணாமலைச்செட்டியாரின் தமிழிசை இயக்கத்தின் பண்ணாராய்ச்சி மாநாடுகளில் பழம் பண்களுக்கான தற்கால இராகங்களின் பெயர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஓதுவார்கள் மிக முக்கிய பாகம் வகித்தனர் இன்றுவரை இப்பணி தொடர்கிறது
13ம் நூற்றாண்டில் கர்நாடக சங்கீதம் தோற்றம் பெற்று தமிழக இசை மரபு பல மாற்றங்கள் பெற்றாலும் சங்ககாலப் பண்ணிசை மரபை இன்றுவரை அதன் இயல்பு மாறாது தேவாரப்பாடல்கள்மூலம் காத்து வருபவர்கள் ஓதுவார்கள்
தமிழிலேயே மட்டும் பாடும் தொன்மையான உண்மையான தமிழிசைக்கலைஞர்கள்.
வேதம் ஆகமம் குருகுலமாக பயில்வதை போன்றே , தேவாரப் பாடசாலைகளில் ஓதுவார்கள் சிறுவயதில் தாய் தந்தையை, குடும்பத்தினரை பிரிந்து குருகுலமாக தேவாரம் பயில்கிறார்கள்.
தமிழுக்கும், சைவத்திற்கும், தமிழிசைக்கும் ஒருசேரப் பணியாற்றுபவர்கள்
குறிப்பட்ட சமூக வேறுபாடு இன்றி அனைத்து சமூகத்தினரும் ஓதுவாராக விளங்கியுள்ளனர்.
தமிழகத்தில் அந்நிய படையெடுப்பு காலத்தில் ஆலயங்களில் பூசைகள் நடைபெறாமல் விக்கிரகங்களை, தேவார செப்பேடுகளை, மக்கள் மண்ணில் புதைத்து பாதுகாத்த போது , தேவாரப் பதிகங்களை பனையோலைகளில் எழுதி பாதுகாத்தவர்கள் இந்த ஓதுவாமூர்த்திகள் ,அவற்றை விற்று அதில் வந்த சொற்ப வருமானத்தில் தம் வாழ்வாதாரத்தினை எதிர்கொண்ட போதும் வேறு தொழிலுக்குச் செல்லாதவர்கள்.
இதே கால கட்டத்தில் மக்கள் மத்தியில் அந்திமக்கிரியைகளின் போது மட்டுமே திருமுறைகள் பாடப்பட்டுவந்தன அந்நிலையை பிற்கால ஓதுவார்கள் மாற்றி மங்கல நிகழ்வுகளிலும் பாடத்துவங்கினர். இந்த மாற்றத்திற்காக மிகுந்த சிரமங்களையும் பொறுத்து வந்துள்ளனர்.
இசைத்திறண் இருந்தும் பணத்திற்காகவோ , பரிசில்களுக்காகவோ பிறமொழிப்பாடல்களையோ, சினிமாப்பாடல்களையோ எங்கும் பாடாதவர்கள்.
மக்கள் துயர் தீர்ப்பதற்கும் திருமுறைகளை வின்ணப்பம் செய்தவர்கள்
கொடிய நோய் தீரவும், மழைவேண்டியும், நாட்டு நலன் கருதிப்பாடி பலனும் கண்டுள்ளனர் .( இன்றும் மழை வேண்டி ஓதுவார்கள் திருமுறை விண்ணப்பம் செய்தால் மழை பெய்யும் அதிசயத்தை காணலாம்)
தமிழகத்தில் ஏற்பட்ட நாத்திக தாக்குதலில் பெரிதும் பாதிக்கப்பட்ட போதும், தமது மரபை கைவிடாது போற்றியவர்கள் ஓதுவா மூர்த்திகள்.
'''இன்றைய நிலை'''
சைவ உலகம் ஓதுவார்களை ஆதரித்து வந்தபோதும்,
இந்த பண்ணிசை மரபினர் இன்றுவரை தமது மரபினை காக்க பல்வேறு இடர்களை சகித்துக்கொண்டுதான் வாழ்கின்றனர்.
நகரத்தார்களும் , ஆதீனங்களும்,அடியார் பெருமக்களும் ஓதுவார்களை போற்றிவருகின்றனர்.
ஒருகாலத்தில் தமிழக கோவில் முழுதும் தேவாரம் ஓதும் அரசுப் பணியாளர்களாக அதிக சம்பளத்துடன் பணியாற்றியவர்கள் விளங்கியவர்கள்
இன்று சில முக்கிய கோயில்களில் மட்டும் குறைந்த ஊதியத்தில் பணியாற்றுகின்றனர்.
தமிழிசையில் இருந்து தோன்றிய கர்நாடக சங்கீதத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் பண்ணிசைக்கு வழங்கப்படுவதில்லை.
ஓதுவார்களை இசைக்கலைஞர்களாகவும் பார்க்கப்படாமல் ஆன்மீகப் பணியாளர்களாகவே பர்க்கப்படுகின்றனர்.
கர்நாடக சங்கீதத்திற்கு தாய் இசையாக விளங்குவது தேவார இசை. அனால் கர்நாடக சங்கீத சபாக்களில் பஜனை சம்பிரதாயத்திற்கு வழங்கப்படும் முக்கியத்துவம் கூட ஓதுவாமூர்த்திகளுக்கு தேவாரம் இசைக்க வழங்கப்படுவதில்லை சில நேரங்களில் மிக அபூர்வமாகவே நடைபெறுகிறது.
சங்கீத நாடக அக்கடமியின் டி.டி.கே விருதினை திருப்பனந்தாள் முத்துக்கந்த ஓதுவார் மட்டுமே பெற்றநிலையில் பல வருடங்கள் கழித்து இந்த வருடம் மயிலை சத்குரு ஓதுவாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேவார இசை அரங்குகள் தனியாகவே நடைபெறுகிறது.
சைவ ஆதீனங்கள், தமிழிசைச்சங்கம், பல சைவ அமைப்புகள் மூலமே ஓதுவார்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர்.
தமிழக அரசின் இசைக்கலைஞர்களுக்கான விருதுகளில் கலைமாமணி விருது ஓதுவார்களுக்கு அபூர்வமாகவே வழங்கப்படுகிறது.
உலகம் தோறும் நடைபெறும் தமிழிசை மாநாடுகளில் மரபு வழி வந்த ஓதுவார்களுக்கு அழைப்பும் இல்லை எந்த விருதுகளும் வழங்கப்படுவதில்லை.
மத்திய அரசின் கலைஞர்களுக்கான உயர்விருதுகளான “பத்ம”விருதுகள் இதுவரை ஆயிரம் வருட பாரம்பரியம் கொண்ட ஓதுவர்கள் ஒருவருக்கும் வழங்கப்படவில்லை என்பது வேதனையான விடயம், மத்திய அரசிற்கு தமிழகத்திலிருந்து எடுத்துச் சொல்வார் யாரும் இல்லை.
அகில இந்திய வானொலியில் தேவார இசைக்கலைஞர்களுக்கு , கர்நாடக இசைக்கு நிகரான நிலை வழங்கப்படவில்லை. மெல்லிசைப்பாடல் பிரிவிலேயே ஓதுவார்களுக்கு கிரேட் வழங்கப்படுகிறது.
அண்ணாமலைப்பல்கலைக்கழகத்திலும், அரசு இசைப்பள்ளிகளிலும் தேவார பட்டயப் படிப்பு மட்டுமே உள்ளன .
தேவாரத்தில் உயர்கல்வி இதுவரை தமிழகத்தில் இல்லை
தேவார இசையின் பெருமையை உணர்ந்து போற்றும் இலங்கை மன்ணில் தேவாரத்திற்காக உயர்கல்வி உள்ளது. நாவலர் பெருமான் வழி நிற்கும் மக்கள் பல வழிகளிலே தேவார இசையை போற்றி வருகின்றனர் உலகிலேயே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மட்டுமே தேவாரத்திற்கு இளங்கலைப்பட்டப் படிப்பு உள்ளது.
இலங்கை இந்துகாலசார அமைச்சு நாடுமுழுவதிலும் ஓதுவார் மரபுவழி பண்ணிசைப் பயிற்சியினை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.
இலங்கை, மலேசியா,சிங்கப்பூர், ,அவுஸ்ரேலியா நாடுகளில் வாழும் தமிழர்கள் ஓதுவார்களின் பெருமை உணர்ந்து அவர்களை போற்றிவருகின்றனர்.
இன்று ஓதுவார்கள் பல இடர்கள் மத்தியிலும் உள் நாட்டிலும் , வெளிநாடுகளுக்கு சென்றும் பல அரங்குகளிலும், இணையங்களிலும் தேவார இசையை ஏற்றுப்போற்றிவருகிறார்கள்
மரபுவழி தமிழிசையை போற்றவேண்டுமாகில் பண்ணோடு இசை பாடிவரும் ஓதுவாமூர்த்திகளை தமிழர்களும், அரசும் , குறிப்பாக இசைக்கலைஞர்களும் இவர்களை ஆதரித்தல் அவசியம் . இல்லாவிடின் தொன்மையான தமிழிசை மரபு அழிவிற்குச் சென்றுவிடும்
இன்று பலர் தேவாரங்களை பாடி வந்தாலும் மரபுவழி வந்த, தேவாரப்பாடசாலைகளில் பயின்ற ஓதுவார்களின் இசைத்திறண் பழமையானது, தனித்துவமானது.
இன்று உலகில் உள்ள இசை வடிவங்களில் தொன்மையான இசைவடிவம் தேவாரங்கள்,
முதல் பதிகம் பாடியவர் காரைக்கால் அம்மையார்,
மூத்த இசையமைபாளர் வள்ளியம்மையார்,
நீண்ட பாரம்பரியம் கொண்ட இசைக்கலைஞர்கள் ஓதுவாமூர்த்திகள்.
என்ற கருத்தினை தமிழர்கள் யாரும் மறவாது இருப்போம்.
ஓதுவாமூர்த்திகளின் பெருமையுணர்ந்து அவர்கள் வழி நின்று தமிழிசை காப்போம்.
== வெளி இணைப்புகள் ==
*https://www.facebook.com/othuvaar?mibextid=ZbWKwL. ஓதுவாமூர்த்திகள் நலச்சங்கம் முகநூல் பக்கம்
*[http://www.dinamalar.com/News_Detail.asp?Id=27043 தினமலரில் வெளியான ஓதுவார் குறையை அரசிடம் ஓதுவார் யார்...? கட்டுரை]
* http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?cat=8&id=2657
|