மா.தாமோதரகண்ணன் அவர்கள் இந்தியாவில் தமிழ்நாட்டில் கி.பி. 26-12-1976 ஆம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிறந்தார்.தந்தையார் பெயர் க.மாரியப்பன், தாயார் பெயர் மா.பழனியம்மாள். திருச்சி,பாலக்கரை,எடத்தெருவில் உள்ள ஸ்ரீயதுகுலசங்கம் நடுநிலைப்பள்ளியில் 4-ஆம் வகுப்பு வரையிலும் 5-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை செல்வதாமோதரன் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியிலும் பொன்னையா அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம்,12-ஆம் வகுப்பு வரையிலும் பயின்றார். பி.ஏ. தமிழ் இளங்கலைப் படிப்பினை (1994-1997) திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியிலும் பி.எட். கல்வியியல்இளங்கலைப் படிப்பினை (1997-1998) தஞ்சாவூர் ஒரத்தநாடு அரசு கல்வியியல் கல்லூரியிலும் எம்.ஏ. தமிழ்முதுகலைப் படிப்பினையும் (1999-2001) எம்.பில் முதுநிலைஆராய்ச்சிப் படிப்பினையும்(2001-2002) திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் நேரடியாகப் பயின்றார். முனைர்பட்ட ஆய்வை(2005-2010) தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறைத்தலைவர் முனைவர் ச.இராசேந்திரன் அவர்களை நெறியாளராகக் கொண்டு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் (முனைர்பட்ட ஆய்வின் தலைப்பு- வைரமுத்து கவிதைகளில் உவமை-படிமம்-குறியீடு- பொருண்மையியல் நோக்கு ) முடித்துள்ளார்.மேலும் யோகா ஆசிரியர் பயிற்சியினை (2011) தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். தினபூமி நாளிதழில் பிழைத்திருத்துநராகவும் பணிபுரிந்த அனுபவம் உண்டு.பிறகு படிப்பு உயர உயர அதற்கேற்ப தனியார் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் பணி, தனியார் கல்லூரியில் பேராசிரியர் பணியும் பார்த்துவந்தார்.முதன் முதலாக 21-11-2002 இல் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிவட்டத்தில் உள்ள மேற்பனைக்காடு அரசுமேல்நிலைப்பள்ளியில் முதுகலைத்தமிழாசிரியராகப் பணியேற்றார். மூன்று ஆண்டுகள் அந்த ஊரிலேயே தங்கியிருந்தார். பின்னர் தஞ்சாவூர் மாவட்டம் பாச்சூர், அரசுமேல்நிலைப்பள்ளியில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தார். கரூர் மாவட்டம் கீழவெளியூர் அரசுமேல்நிலைப்பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்தார். திருச்சிராப்பள்ளி மாவட்டம், சிறுகாம்பூர், அரசுமேல்நிலைப்பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்தார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் அரசங்குடி அரசுமேல்நிலைப்பள்ளியில் ஆறு ஆண்டுகள் பணிபுரிந்தார். கரூர் மாவட்டம்,செங்குளம், அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக ஓராண்டு பணி புரிந்தார். திருச்சிராப்பள்ளிமாவட்டம்,ஆமூர்,அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக இரண்டாண்டு காலம் பணிபுரிந்தார். தற்பொழுது திருச்சிராப்பள்ளி மாவட்டம்,அன்பில்,அரசுமேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து வருகின்றார். பணியாற்றும் பள்ளிகளில் நாட்டுநலப்பணித்திட்டம் எனும் அமைப்பைத் தொடங்கி பலஆண்டுகள் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் கிராமப்புறச் சிறப்புமுகாம்கள் நடத்தி உள்ளார். பள்ளி அளவிலும் கிராமப்புற அளவிலும் நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். பி.ஏ. தமிழ்இளங்கலைப் படிப்பினை (1994-1997) திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படிக்கின்ற போது “விடியல்” சிற்றிதழுக்கு உதவி ஆசிரியராக இருந்தார். இவ்விதழ் பேராசிரியர்கள், மாணவர்களிடம் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. தெய்வத்திரு.கலைமாமணி கவிஞர்திலகம் திருச்சிபாரதன் அவர்களின் மாணவர்களில் இவரும் ஒருவர்.தன்னுடைய கலைஇலக்கியத்திற்கு ஆசிரியராக திருச்சிபாரதன் அவர்களையே குறிப்பிடுவார்.சிறுவயதிலேயே திருச்சிபாரதன் அவர்களிடம் அறிமுகமாகி அவரின் இறுதி நாள் (26-11-2008) வரைக்கும் உடனிருந்து பல்வேறு நிலைகளில் அவருக்குத் துணையாக இருந்துள்ளார்.பத்மபூஷண் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் என்னுடைய ஆய்வேட்டைப் பார்த்து “விஞ்ஞானப் பூர்வமாய் என்னுடைய படைப்புகளை ஆராய்ச்சிச் செய்துள்ளீர்கள்” என்று உளமாற வாழ்த்தினார்.
1. வாஞ்சி மணியாச்சி(அரவிந்தன்) (சிறுகதைத்தொகுதி) (ஆண்டு2005) 2. ஆங்கிலப் பழமொழிகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகள் (அரவிந்தன்) (ஆண்டு2011) 3. மின்னல் (ஹைக்கூ கவிதைகள்) (அரவிந்தன்) (ஆண்டு2013) 4.சாமூராய் (ஹைக்கூ கவிதைகள்) (ஆண்டு2016) 5.வாழ்க்கைப்போர்க்களத்தில் பாரதியார் (ஆண்டு2016) 6.திருப்பாவை(உரை) (ஆண்டு2018) 7. ஆண்டாள்காவியம் (ஆண்டு-2018) 8.பாரதி அஞ்சலட்டை அய்க்கூ தொகுப்பு நூல் (ஆண்டு-2024),இவர்இயக்கி உள்ள ஆவணப்படங்கள்:
1.பன்முகப் பார்வையில் பி.வெங்கட்ராமன்(ஆண்டு2014)
வரிசை 14:
1.கலைஞா்தொலைக்காட்சியில்“விடியலேவா”நிகழ்ச்சி ஒளிபரப்பு நாள்:04-08-14
2.பொதிகைத் தொலைக்காட்சியில்“கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்” கவிஞர் பிறைசூடன் அவர்களோடு நிகழ்ச்சியில் பங்கேற்பு. ஒளிபரப்பு நாள்:21-12-2015
3. பொதிகைத் தொலைக்காட்சியில் “நம்ம"நம்ம ஊர்” நிகழ்ச்சியில் பங்கேற்பு.
ஒளிபரப்பு நாள்:23-11-2015
பெற்ற விருதுகள் : 1.புதுக்கோட்டை இலக்கியப்பேரவையின் சார்பில்“இலக்கியச்செம்மல்”