தானுந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 71:
 
== நடுநிலை மதிப்பீடு ==
 
தொழில்மயமான நாடுகளில் தானுந்துகளே பெருமளவிலான காற்று மாசுபாட்டுக்கு காரணமாகின்றன. வழமையான பயணிகள் தானுந்துகள் பெருமளவிலான பசுமை இல்ல வாயுக்கள் (முக்கியமாக கார்பன்-டை-ஆக்சைடு), சிறிய அளவில் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் மற்றும் சில ஹைட்ரோகார்பன்களை வெளிவிடுகின்றன.
 
தானுந்துகளின் பயன்பாட்டால், பல விலங்குகள் மற்றும் தாவரங்கள் அவற்றின் வாழ்விடம் அழிதல் மற்றும் காற்று மாசுபாட்டால் பெருமளவு பாதிக்கப்படுகின்றன. மேலும் பல விலங்குகள் சாலை விபத்துகளில் இறக்கின்றன.
 
வாகனங்கள் மற்றும் அவற்றின் மூலம் பல இடங்களுக்கு சென்று வருவது ஆகிய வகைகளில் வாகனப் பயன்பாடு அதிகரித்து அதனால் பெருமளவு போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது.
 
மரபுசார் எரிபொருட்களின் பயன்பாடு இருபது மற்றும் இருபத்தோறாம் நூற்றாண்டில் அதிகரித்திருப்பதற்கு தானுந்துகளின் பயன்பாடு அதிகரித்தது ஒரு முக்கியமான காரணமாகும்.
 
== ஓட்டுனரல்லாத உந்துகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தானுந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது