மூச்சுத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு திருத்தம்
சிறு திருத்தம்
வரிசை 1:
[[படிமம்:Respiratory system complete numbered.svg|thumb|right|300px|மனித மூச்சியக்கத் (சுவாசத்) தொகுதியின் அமைப்பு.]]
உயிரினங்களில், '''மூச்சுத் தொகுதி''' அல்லது '''மூச்சியக்கத் தொகுதி''' அல்லது '''சுவாசத் தொகுதி''' (respiratory system) உடற் செயற்பாடுகளுக்குத் தேவையான [[வளிமம்|வளிமங்களை]] உள்ளிளுத்து, வளிமப் பரிமாற்றத்திற்கு உதவி, தேவையற்ற வளிமத்தை வெளியேற்றும் பணியைச் செய்யும் ஒரு [[உடற்கூற்றியல்]] தொகுதியாகும். பயன்படும் வளிமங்கள், தொகுதியின் உடற்கூறு அல்லது அமைப்பு, வழங்கப்படும் வளிமங்களின் [[உடலியல்]] பயன்பாடு என்பன [[உயிரினம்|உயிரினங்களைப்]] பொறுத்து வேறுபடுகின்றன. [[மனிதர்|மனிதர்களிலும்]], பிற [[பாலூட்டி]]களிலும் மூச்சுத் தொகுதியின் உடற்கூற்று அம்சங்களாக [[மூச்சுக் குழாய்]]கள், [[நுரையீரல்]], மூச்சியக்கத் [[தசை]]நார்கள் என்பன காணப்படுகின்றன. [[ஆக்சிசன்]] மூலக்கூறுகளும், [[காபனீரொட்சைட்டு]] மூலக்கூறுகளும் [[பரவல்]] மூலம், வெளிச் சூழலுக்கும், [[குருதி]]க்கும் இடையே மாற்றீடு செய்துகொள்ளப் படுகின்றன. இம் மாற்றீடு நுரையீரலின் நுண்குழியப் பகுதியில் நடைபெறுகின்றது.
 
[[பூச்சி]]கள் போன்ற உயிரினங்களில் மூச்சுத் தொகுதி மிகவும் எளிமையான உடற்கூற்றியல் அமைப்பைக் கொண்டனவாக உள்ளன. [[நிலநீர் வாழிகள்|ஈரூடகவாழி]]களில், அவற்றின் [[தோல்|தோலும்]] கூட வளிம மாற்றீட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. [[தாவரம்|தாவரங்களிலும்]] மூச்சியக்கத் தொகுதி உள்ளது ஆயினும், இவற்றில் வளிம மாற்றீடு எதிர்த் திசையில் அமைந்துள்ளது. தாவரங்களின் மூச்சுத் தொகுதியின் முக்கியமான உடற்கூற்று அம்சமாக [[இலை]]களின் கீழ்ப் பகுதியில் அமைந்துள்ள நுண்துளைகள் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/மூச்சுத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது