ஒளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 49:
 
== ஒளி பற்றிய கோட்பாடுகள் ==
===துகள் கோட்பாடு===
 
''பியரி கசென்டி'' (1592-1655) எனும் அணு அறிவியலாளர் ஒளியின் துகள் கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார். அவரது கட்டுரை அவரது இறப்புக்குப் பின்னர் 1960-களில் பிரசுரிக்கப்பட்டது. தனது முற்காலத்திலேயே கசென்டியின் கட்டுரைகளைப் படித்திருந்த '''[[ஐசக் நியூட்டன்]]''', 1965-ல் அவர் எழுதிய ''ஒளியின் கற்பிதம்'' (Hypothesis of Light) எனும் நூலில் ஒளி மூலத்திலிருந்து அனைத்து திசைகளிலும் ஒளித்துகள்கள் வெளியிடப்படுகின்றன என்று கூறினார். ஓளியின் அலைக் கோட்பாட்டை இவர் ஏற்க மறுத்தார். தடைகள் எதிர்வரும்போது அலைகள் வளைந்து செல்லும், ஆனால் ஒளி நேர்க்கோட்டில் மட்டுமே பயணிக்கிறது என்ற கருத்தை இவர் கொண்டிருந்தார். ஃபிரான்செஸ்கோ கிரிமால்டியால் கண்டுணரப்பட்ட ஒளயின் விளிம்பு வளைவு நிகழ்வை, ஒளி ஈதர் எனும் கோட்பாட்டு ஊடகத்தில் பயணிக்கும்போது அலைகளை உருவாக்கும் என்று கூறி நிறுவினார்.
 
நியூட்டனின் கோட்பாட்டின்படி ஒளி எதிரொளிப்பை திறம்பட விவரிக்க முடியும், ஆனால் ஒளிவிலகலை சரியாக அவதானிக்கவில்லை. ஒளியானது அடர்த்தி மிகுந்த ஊடகத்துக்குள் செல்லும்போது அதன் திசைவேகம் அதிகரிக்கிறது, ஏனெனில் அதில் புவியீர்ப்பு அதிகமாக இருக்கும் என்பதாக அதன் கருதுகோள் அமைகிறது. 1704-இல் வெளியிடப்பட்ட ''ஆப்டிக்சு'' (Opticks) எனும் புத்தகத்தில் முழுமையான- ஒளியின் துகள் கோட்பாட்டை பதிப்பித்தார். அறிவியலாளராக நியூட்டன் பெற்றிருந்த புகழின் காரணமாக 18-ஆம் நூற்றாண்டின் முழுமைக்கும் அவரது கோட்பாடு நிலைபெற்றிருந்தது. துகள் கோட்பாட்டை அடிப்படையாக வைத்து ''லாப்லாசு'' (Laplace), ஒளி வெளியேறமுடியாத அளவுக்கு ஒரு பொருள் நிறையில் மிகுந்திருக்கக்கூடும். அதாவது அத்தகைய அதீத அளவிலான ஈர்ப்புவிசையைக் கொண்டிருந்தால் ஒளி வெளியேறாத ''கருந்துளை'' (Black Hole) இருக்கக்கூடும் என்ற கருதுகோளை முன்வைத்தார். ஆயினும், ஒளியின் அலைக்கோட்பாடு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்ட பின்னர் தன் கருதுகோள் தவறென ஒப்புக்கொண்டார். (உண்மையில் பின்னர் நிரூபிக்கப்பட்டபடி ஒளியின் துகள் கோட்பாடோ அலைக் கோட்பாடோ முழுதும் சரியானதில்லை, இரு கோட்பாடுகளும் பல வகையான ஒளியின் பண்புகளை விவரித்தாலும் அனைத்து பண்புகளையும் விவரிக்க இயலவில்லை.) '''ஸ்டீபன் ஹாக்கிங்''' மற்றும் '''ஜார்ஜ் எல்லிசு''' எழுதிய ''கால-வெளியின் பெரிய அளவிலான கட்டமைப்பு'' (Large Scale structure of Space-time) நியூட்டனின் ஒளித் துகள் கோட்பாட்டுக் கட்டுரையின் ஆங்கில மொழியாக்கம் உள்ளது.
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/ஒளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது