ஒலியொத்தவேகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Stack| [[File:FA-18 Hornet breaking sound barrier (7 July 1999)...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 7:
}}
 
[[வானூர்தியியல்|வானூர்தியிய]]லில், '''ஒலியொத்தவேகம்''' (''Transonic speed'') என்பது ஒரு வானூர்தியினை ஒட்டிய பாய்ம ஓட்டம் [[ஒலியின் விரைவு|ஒலியின் விரை]]வை விட சில இடங்களில் சற்று குறைவாகவும் சில இடங்களில் சற்றதிகமாகவும் இருக்கும் நிலையைக் குறிப்பதாகும், அதாவது [[மாக் எண்|மாக்]] 0.8 - 1.4 (600-900mph). இது வானூர்தியின் வேகத்தை மட்டும் பொருத்ததல்ல, வானூர்தியின் அண்மைச்சூழலில் காற்றின் வெப்பநிலை மற்றும் அடர்த்தியையும் பொருத்ததாகும். பொதுவாக ஒலியொத்தவேகம் என்பது, [[மாறுநிலை மாக் எண்]]ணிற்கும் (- பாய்வின் விரைவு ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மீயொலிவேகப் பாய்வாகவிருக்கும், மற்ற இடங்களில் குறையொலிவேகப் பாய்வாக இருக்கும்,) வானூர்தியை ஒட்டிய மொத்த பாய்வும் மீயொலிவேகப் பாய்வாக மாறும் மாக் எண்ணிற்கும் இடையிலுள்ள பாய்வாகவும் குறிக்கப்படுகிறது.
 
நவீன, [[தாரைப் பொறி]] பொருத்திய வானூர்திகள் அனைத்தும் ஒலியொத்தவேகத்தில் செல்லுமாறு கட்டமைக்கப்படுகின்றன. ஒலியொத்தவேகத்தில் வானூர்தியின் வேகம் அதிகரிக்கும்போது, வானூர்தியின் [[இழுவை]] அதிக அளவு அதிகரிக்கிறது, ஆகையால் அவ்வேகங்களைத் தாண்டி செல்வதானால் இழுவையை ஈடுசெய்ய அதிக அளவு எரிபொருளை எரிக்க வேண்டி இருக்கும். அதிவேக வானூர்திகள் அனைத்திலும் அலை இழுவையைக் குறைப்பதற்கான முயற்சிகளைக் காணலாம்: முக்கியமாக [[வளைந்த இறக்கை]]களின் பயன்பாடு, அதைத்தவிர்த்து முக்கியமான பயன்பாடு: [[விட்கோம்பு பரப்பு விதி]]யின் விளைவாக குளவி-இடுப்பு வானுடல் கட்டமைப்புப் பயன்படுத்தப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஒலியொத்தவேகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது