பண்டாரம் (சமய மரபு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
==தொழில்கள் ==
 
===கோயில் பணி===
சைவ சமய அனுட்டானங்களையும், பூசை விதிகளையும் நன்கு அறிந்திருந்தனர்; இதன் காரணமாகவே இன்றும் இக்குலத்தினர் [[மலேசியா]], [[சிங்கப்பூர்]] போன்ற தெற்காசிய நாடுகளிலும் கோவில்களில் பணிபுரிகின்றனர். இந்தியாவில் பிராமணருக்கு அடுத்தபடியாக கோவில்களில் பணிபுரிகின்றனர். கர்நாடகம், ராயலசீமா மற்றும் மராட்டியத்தில் பிராமணருக்கு மேலாகவே வீரசைவர் அல்லது லிங்காயத் பெயரில் ஆலயங்களில் பணிபுரிகின்றனர். [[தமிழ்நாடு]], [[கேரளம்|கேரள]] மாநிலங்களில் சில ஆலயங்களில் ஓதுபவர்களாகவும் உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில், தேவதானபட்டி மூங்கில்அன்னை காமாட்சி அம்மன் கோவில்,பெரியகுளம் கௌமாரியம்மன் கோவில், தேனி சந்தை மாரியம்மன் உள்ளிட்ட பல கோவில்களில் இந்த கன்னடியர் மரபினர் பல நூற்று ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை பூசாரிகளாக உள்ளனர்.
 
===புலவர்===
அக்காலங்களில் அரசவைப்புலவராகவும் இருந்துள்ளனர். இதனால் இவர்களை "புலவர்" என்றே அழைத்துள்ளனர். தற்பொழுது கூட தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் குறிப்பிட்ட ஒரு பண்டாரப் பிரிவினரை "புலவர்" என்றே அழைக்கின்றனர்.
 
வரிசை 43:
தமிழ்நாடு முழுவதும் பரவலாக காணப்பட்டாலும் ராமநாதபுரத்தில் ஆண்டிப்பண்டாரம் அல்லது புலவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் வீரசைவர், திண்டுக்கல் பகுதியில் பண்டாரம், மலைபண்டாரம் அல்லது ஆண்டிபண்டாரம், மதுரையில் யோகிஸ்வரர்,கன்னடியர்,தேனி மாவட்டத்தில் பெரியகுளம், தேனி அல்லிநகரம், வீரபாண்டி, வடுகபட்டி பகுதியில் கன்னடியர் என்றும் போடிநயகனுர் பகுதிகளில் ஜங்கமர் என்றும் அழைக்கப்படுகிறார்கள் கோவையில் ஜங்கம் அல்லது லிங்காயத் போன்ற பெயரால் தங்களை அழைத்துக்கொள்கின்றனர். இருந்தாலும் ஆண்டிபண்டாரம் அல்லது பண்டாரம் என்ற பெயரை சமூகம் கேலியாகசித்தரிப்பதால் பொதுவாக முக்கியமாக இளைய தலைமுறையினர் வீரசைவர் மற்றும் யோகிஸ்வரர் என்றே கூறிக்கொள்கின்றனர். இதனால் அரசு மூலம் இவர்களுக்கு கிடைக்கவேண்டிய சலுகைகள் கிடைக்காமல் போய்விடுகின்றன.
 
===மலைப்பண்டாரம்===
மலைப்பண்டாரம் என்னும் குலப்பிரிவும் உள்ளது. இவர்கள் சைவசமயத்தின் மீதோ தமிழின் மீதோ தாகம் கொண்டவர்களல்லர். இவர்கள் காட்டில் எளிய வாழ்க்கை மேற்கொண்டவர்கள். மலையாளத்திற்கு நெருக்கமான மொழியையே பேசுகிறார்கள். காட்டுக்குகை, மரக்கூட்டம், பாறையிடுக்கு இவற்றை வாழ்விடமாகக் கொண்டவர்கள். காட்டில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு பண்டமாற்றம் செய்து வாழ்பவர்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/பண்டாரம்_(சமய_மரபு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது