புறா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: புறா முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரின...
(வேறுபாடு ஏதுமில்லை)

10:39, 1 ஏப்பிரல் 2007 இல் நிலவும் திருத்தம்

புறா முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். இது தானியவகைகளை மட்டும் உணவாக உண்ணும் சைவப்பட்சி ஆகும். பறவைகளிலேயே தண்ணீரைத் தன் அலகால் உறிஞ்சிக் குடிக்கும் ஒரே பழக்கமுடையது புறா மட்டுமே என்றும் சொல்லப்படுவதுண்டு. இது வீட்டிலும் செல்லப்பறவையாக வளர்க்கப்படுகிறது. வீட்டில் வளர்க்கபடும் புறாக்கள் உருவத்தில் சிறியனவாகவும், சாதுவாகவும் காணப்படும். காட்டுப்புறாக்கள் உருவத்தில் சற்றுபெரியவை.

மன்னர்கள் காலத்தில் கடிதப்போக்குவரத்து மற்றும் தூது ஓலை அனுப்புவதற்கு நன்கு பயிற்சிகொடுத்துப் பழக்கப்பட்ட புறாக்களே பயன்படுத்தப்பட்டன. மேலும் தமிழ்நாட்டில் இப்போதும் புறாக்களுக்கான பந்தயம் நடைபெறுகிறது. பழக்கப்பட்ட புறாக்கள் வெகுதொலைவில் கொண்டுவிடப்பட்டு அவை தங்கள் கூட்டுக்குத் திரும்பி வரும் நேரத்தை வைத்து இப்பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புறா&oldid=120156" இலிருந்து மீள்விக்கப்பட்டது