கடற்பனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
விரிவாக்கம்
வரிசை 1:
'''கடல்பனி''' (Sea ice) என்பது [[கடல்]] நீரானது [[உறைதல்|உறையும்போது]] தோன்றும் பனிக்கட்டிகளைக் குறிக்கும். கடல் நீரானது [[உப்பு|உப்பை]]க் கொண்டிருப்பதனால், இதன் உறைநிலையானது தூய நீரை விடவும் குறைவாகவே இருக்கும். கடல்நீரானது தனது உறைநிலையை (அண்ணளவாக -1.8 °[[செல்சியசு|C]] (28.8 °[[பரனைட்டு|F]])) அடையும்போது உறைந்து கடல் பனியாக மாறும்.
 
இந்தக் கடல் பனி, [[பனிமலை]] களின் இயல்பிலிருந்து வேறுபடுகின்றது. பனிமலைகள் [[பனியாறு]], [[பனியடுக்கு]] போன்றவற்றில் ஏற்படும் [[பனி அரிப்பு]] செயல்முறையினால், அவற்றிலிருந்து திடீரென உடைந்து, பிரிந்து செல்லும் பெரும்பகுதி [[பனிக்கட்டி]]யை மலைபோலக் கொண்டதாக இருக்கும். இந்த பனிமலைகள் திறந்த [[நீர்நிலை]]களில் தாமாக மிதந்தபடி இருக்கு. அத்துடன் பனிமலைகள் பனியடுக்கு அல்லது பனியாற்றிலிருந்து வருவதனால், ஆரம்பத்தில் இருந்தே [[நன்னீர்|நன்னீரைக்]] கொண்டதாக இருக்கும். ஆனால் கடல் பனியானது, ஆரம்பத்தில் உப்பைக் கொன்டிருந்தாலும், பின்னர் அதன் தோற்ற மாற்றச் செயல்முறையின்போது, உப்பை இழந்து நன்னீராக மாற்றமடையும்.
"https://ta.wikipedia.org/wiki/கடற்பனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது