காற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 21:
== பயன்களும், தீய விளைவுகளும் ==
[[படிமம்:Tarangini.jpg|thumb|200px|[[ஐ,என்.எசு. தரங்கினி]], இந்தியக் கடற்படையின் காற்று வலுவால் இயங்கும் [[பாய்க்கப்பல்]] ஒன்று.]]
மனித நாகரிக வரலாற்றில், காற்று பல [[தொன்மம்|தொன்மங்கள்]] உருவாவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. பல வரலாற்று நிகழ்வுகளின்மீதும், [[போக்குவரத்து]], போர்முறைகள் என்பவற்றின் மீதும் காற்றின் செல்வாக்கைக் காண முடியும். இயந்திரங்களை இயக்கவும், [[காற்றுச் சுழலி]] [[மின்னுற்பத்தி]]க்கும், ஆற்றல் மூலமாக விளங்கியுள்ளதுடன், பலவகையான [[பொழுதுபோக்கு]]களுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது. ஒரு காலத்தில் உலகின் கடல்கடந்த பயணங்களுக்குக் காற்றின் வலுவினால் இயங்கிய [[கப்பல்]]களே பயன்பட்டன. குறும் பயணங்களுக்குப் பயன்படும் வெப்பவளி பலூன்கள் காற்றின் ஆற்றலைப் பயன்படுத்துகின்றன. அதே வேளை காற்று கடுமையாக வீசும்போது மரங்கள் முதலிய இயற்கை அம்சங்களுக்கும், மனிதனால் உருவாக்கப்பட்ட [[கட்டிடம்|கட்டிடங்கள்]] முதலிய அமைப்புக்களுக்கும் கடும் சேதங்களை உண்டாக்குகின்றது. காற்றினால் ஏற்படும் சீரற்ற காலநிலை [[வானூர்தி]]களின் பறப்புக்கும் ஆபத்தான நிலைமைகளை உருவாக்குகின்றது.
 
காற்றுத்தாக்க வழிமுறைகள் மூலம் நில அமைப்புக்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. வளமான மண் உருவாதலும் இவற்றில் ஒன்று. காற்று பெரிய [[பாலைவனம்|பாலைவனப்]] பகுதிகளில் இருந்து [[தூசி]]த் துகள்களை அது இருக்கும் இடத்திலிருந்து நீண்ட தொலைவு எடுத்துச் செல்கிறது. காற்றினால் [[காட்டுத்தீ]] விரைவாகப் பரவும் நிலையும் ஏற்படுகிறது. பல்வேறு [[தாவரம்|தாவர]] வகைகளின் [[வித்து]]க்களை தொலை தூரங்களுக்கு எடுத்துச் சென்று பரப்புவதன் மூலம் அவ்வாறான தாவரங்கள் பெருகி வளர்வதற்கும் காற்றுத் துணை புரிகிறது. குளிரான வெப்பநிலைகள் இருக்கும்போது காற்று கால்நடைகள் மீது எதிர்மறையான தாக்கங்களை உண்டாக்குகின்றது. விலங்குகளின் உணவு சேமிப்பு, அவற்றின் [[வேட்டை]]யாடல் முறை, தற்காத்துக்கொள்ளும் முறை என்பவற்றின் மீதும் காற்று தாக்கங்களை உண்டாக்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/காற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது