சிந்துவெளி நாகரிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தெற்காசியாவின் வெண்கலக் கால நாகரிகம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(வேறுபாடு ஏதுமில்லை)

19:09, 17 மே 2004 இல் நிலவும் திருத்தம்

சிந்துவெளி நாகரிகம் உலகின் மிகப் பழைய நாகரிகங்களுள் ஒன்று. இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தளைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடிப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது. இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது. தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முத்திரைகளில் காணப்படுகின்ற, அவர்களுடைய மொழியை எழுதப்பயன்படுத்திய குறியீடுகளையும் எவரும் இன்னும் வாசித்து அறிய முடியவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்துவெளி_நாகரிகம்&oldid=1224" இலிருந்து மீள்விக்கப்பட்டது