முதலாம் தாமசுஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சேர்க்கை
 
சி விக்கியாக்கம்
வரிசை 16:
}}
 
'''திருத்தந்தை முதலாம் தாமசுஸ்''' (''Pope Damasus I'') [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க திருச்சபையில்]] [[உரோமை]] ஆயராகவும் [[திருத்தந்தை|திருத்தந்தையாகவும்]] அக்டோபர் 1, 366 முதல் திசம்பர் 11, 384 வரை ஆட்சிசெய்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 37ஆம் திருத்தந்தை ஆவார்.
 
==முதலாம் தாமசுஸ் ஆற்றிய முக்கிய பணிகள்==
 
திருத்தந்தை முதலாம் தாமசுஸ், [[திருச்சபை|திருச்சபையின்]] தலைமைப் பதவியை வகிக்கின்ற திருத்தந்தையின் அதிகாரத்தை நிலைநாட்டுவதில் தீவிரமாகச் செயல்பட்டவர் ஆவார். அவர், [[கிறித்தவம்|கிறித்தவ நம்பிக்கையின்]] பொருட்டு இரத்தம் சிந்தி உயிர்நீத்த மறைச்சாட்சிகளின் கல்லறைகளை அழகுபடுத்தி, அங்குப் பளிங்குக் கற்கள் பதித்து, அவற்றில் மறைச்சாட்சிகளின் பெயர், பணி போன்ற தகவல்களைப் பொறிக்கச் செய்தார். விவிலியத்தை[[விவிலியம்|விவிலியத்தின்]] [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டை]] மூலமொழியாகிய கிரேக்கத்திலிருந்து நேரடியாக இலத்தீனில் மொழிபெயர்த்து ஆக்கும் பணியைத் திருத்தந்தை தம் செயலாரகப் பணியாற்றிய புனித ஜெரோம் (இறப்பு: சுமார் 420) என்பவரிடம் ஒப்படைத்தார். அம்மொழிபெயர்ப்பு "மக்கள் பதிப்பு" என்னும் பொருள்தரும் விதத்தில் "Vulgate" ({{lang-la|vulgata}}) என்னும் பெயர் பெற்றது. அதற்கு முன் வழக்கத்திலிருந்த பெயர்ப்பு "பழைய இலத்தீன் பெயர்ப்பு" ({{lang-la|vetus latina}}) என்னும் பெயர் கொண்டது.
 
==பிறப்பும் வளர்ப்பும்==
வரிசை 63:
==திருத்தந்தையின் அதிகாரம் வலியுறுத்தப்படல்==
 
உரோமையின் ஆயரும் அனைத்துலகத் திருச்சபையின் தலைவருமாக இருக்கின்ற திருத்தந்தை, [[இயேசு|இயேசுவிடம்]] இருந்து பெற்றுக்கொண்ட அதிகாரத்தை இவர் மிகவும் வலியுறுத்தினார். [[புனித பேதுரு|புனித பேதுருவின்]] வழித்தோன்றலாக வருபவர் திருத்தந்தை என்பதால் அவருக்கு இந்த அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே திருச்சபையின் கொள்கைகளை அதிகாரப்பூர்வமாக எடுத்து உரைக்கும் பொறுப்பு திருத்தந்தையைத் தனிப்பட்ட முறையில் சார்ந்தது என்று தாமசுஸ் அழுத்தம் திருத்தமாகப் பறைசாற்றினார்.
 
==வரலாற்றுச் சிறப்பான பணிகள்==
வரிசை 70:
*இவர் திருத்தந்தை மைய அலுவலகத்தின் ஆவணக் காப்பகத்தை ஏற்படுத்தி, வரலாற்று ஏடுகள் பாதுகாக்கப்பட வழிசெய்தார்.
*உரோமை நகரிலும் மேற்கு உரோமைப் பேரரசிலும் கிறித்தவ வழிபாட்டு மொழியாக இலத்தீன் மொழியை அறிவித்தார்.
*கி.பி. நான்காம் நூற்றாண்டுவரை புழக்கத்தில் இருந்த [[விவிலியம்|விவிலியத்தின்]] "பழைய" இலத்தீன் மொழிபெயர்ப்பை மறுபார்வையிட்டு, மூல மொழியாகிய கிரேக்கத்திலிருந்து [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டைப்]] புதிதாக மீண்டும் இலத்தீனில் பெயர்க்க ஏற்பாடு செய்தார். இப்பணியைத் திருத்தந்தை தாமசுஸ் தமது செயலராக இருந்த புனித ஜெரோம் என்பவரிடம் ஒப்படைத்தார். அவர் பல ஆண்டுகள் கடின உழைப்புக்குப் பின் (382-405) உருவாக்கிய இலத்தீன் மொழிபெயர்ப்பு "மக்கள் பதிப்பு"({{lang-la|vulgata}}) என்னும் பெயர் பெற்றது.
*முதல் நூற்றாண்டுகளில் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டுக் கொலைசெய்யப்பட்ட மறைச்சாட்சிகள் மற்றும் திருத்தந்தையர் ஆகியோரின் கல்லறைகளை இவர் அழகுபடுத்தினார். அக்கல்லறைகளில் பதித்த பளிங்குக் கற்களில் வரலாற்றுக் குறிப்புகளை எழுதிட இவர் வழிசெய்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_தாமசுஸ்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது