வி. நவரத்தினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 32:
 
==தமிழரசுக்கட்சியில் இணைதல்==
[[1948]] இல் [[இலங்கை]] சுதந்திரம் பெற்ற பின் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரஜாவுரிமைப் பதிவுச் சட்டத்தை எதிர்த்ததால் [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்|தமிழ்க் காங்கிரஸ்]] கட்சியிலிருந்து வெளியேறிய தந்தை [[எஸ். ஜே. வி. செல்வநாயகம்|செல்வநாயகத்துடன்]] இணைந்து [[1947]] [[டிசம்பர் 17]] இல் தமிழரசுக் கட்சி உருவாகுவதற்கு தோள் கொடுத்தவர் நவரத்தினம். அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தவர். [[1952]] பொதுத் தேர்தலில் ஊர்காவற்றுறைத் தொகுதி சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
 
[[1956]] இல் [[தனிச் சிங்களச் சட்டம்]] அறிமுகப்படுத்தப்பட்ட போது காலி முகத்திடலில் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கான ஆலோசனைத் திட்டத்தைத் தீட்டி வழிநடத்தினார். [[பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1957|பண்டா - செல்வா ஒப்பந்தம்]] தொடர்பாக முக்கிய பங்காற்றினார்.
 
==தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேற்றம்==
[[ஊர்காவற்றுறை]] தொகுதியில் [[1965]] தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். [[1967]] இல் தமிழரசுக் கட்சி தேசிய அரசில் அங்கம் வகித்தது. அச்சமயம் [[சிறிமாவோ சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தம்|சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்த]] மசோதா ([[டட்லி சேனநாயக்கா|டட்லி]] அரசில்) பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அதனைக் கடுமையாக எதிர்த்து வாக்களித்ததுடன், அடையாள அட்டை அமுலாக்கச் சட்டத்தையும் தீவிரமாக எதிர்த்தார். அதனால், கட்சியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். தேசிய அரசில் தமிழரசுக்கட்சி இணையக் கூடாதெனவும் அமைச்சுப் பதவியை ஏற்கக் கூடாதெனவும் எதிரணியிலிருந்து நிபந்தனையுடன் ஆதரவு வழங்கலாமென வாதிட்டமையே அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட காரணமாக அமைந்தது.
 
==தமிழர் சுயாட்சிக் கழகத்தை ஆரம்பித்தல்==
வரிசை 73:
[[பகுப்பு:2006 இறப்புகள்]]
[[பகுப்பு:இலங்கையின் 6வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
 
[[en:V. Navaratnam]]
"https://ta.wikipedia.org/wiki/வி._நவரத்தினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது