நன்றி தெரிவித்தல் நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி சேர்க்கை
வரிசை 28:
இவ்விழாவைச் சார்ந்த இன்னொரு வழக்கம் அமெரிக்க முதல்வர் தமது இல்லமாகிய வெள்ளை மாளிகையில் இரண்டு வான்கோழிகளுக்கு மன்னிப்பு வழங்கும் சடங்கு ஆகும். அமெரிக்க குடும்பங்களில் பல்லாயிரக் கணக்கான வான்கோழிகள் இவ்விழாவை முன்னிட்டுக் கொல்லப்படுவதால், அவ்வாறு "கொலைத் தண்டனை" பெறுவதிலிருந்து தப்பித்துப் பிழைக்கின்ற இரண்டு வான்கோழிகள் நாட்டிலுள்ள விலங்குக் காப்பகங்களுக்குப் பரிசாக அளிக்கப்படும். இவ்வாறு அவை சாவிலிருந்து தப்புகின்றன.
 
==மேசி நிறுவனத்தின் ஊர்வலக் காட்சி==
==2012ஆம் ஆண்டு கொண்டாட்டம்==
ஐக்கிய அமெரிக்காவில் கொண்டாடப்படுகின்ற நன்றி தெரிவித்தல் நாள் நிகழ்ச்சியில் நியூயார்க் நகரில் மேசி (''Macy's'') என்னும் மாபெரும் வர்த்தக நிறுவனம் பெரியதொரு ஊர்வலக் காட்சிக்கு ஏற்பாடு செய்வது வழக்கம். நன்றி விழா நாளன்று காலையில் பல்லாயிரக் கணக்கான மக்கள் குழந்தைகளுடன் நியூயார்க் வந்து கூடுவார்கள். அப்போது அமெரிக்க கலாச்சாரத்தில் பிரபல்யமான கார்ட்டூன் பாத்திரங்கள் பிரமாண்டமான பலூன் வடிவில் உருவமைக்கப்பட்டு ஊர்வல ஊர்திகள் உதவியோடு பவனியாகச் செல்லும். இசைக் குழுக்கள் இன்னிசை முழங்கும். அப்போது மேலிருந்து சிறு தாள் துண்டுகள் தூவப்படும்.
ஐக்கிய அமெரிக்காவில் 2012இல் நவம்பர் 22, வியாழனன்று நன்றி தெரிவித்தல் நாள் கொண்டாடப்படுகிறது.
 
மேசி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இந்த ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்கிறது. 2012ஆம் ஆண்டு நிகழும் ஊர்வலம் அந்நிறுவனம் நடத்துகின்ற 86ஆம் நிகழ்ச்சி ஆகும்.
 
இந்த ஊர்வலத்தின் போது சாந்தா கிளாஸ் எனப்படும் கிறிஸ்மஸ் தாத்தா தோன்றி குழந்தைகளோடு நடனம் ஆடி விளையாடுவது ஒரு சிறப்பு நிகழ்ச்சி.
[[பகுப்பு:கனடாவின் சிறப்பு நாட்கள்]]
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்காவின் சிறப்பு நாட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நன்றி_தெரிவித்தல்_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது