ஐம்பூதங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''ஐம்பூதங்கள்''' எனப்படுபவை [[நீர்]], [[நிலம்]], [[நெருப்பு]], [[காற்று]], [[வானம்|ஆகாயம்]] என்பன. இப்பிரபஞ்சத்திலுள்ள பல [[சூரிய மண்டலம்|சூரிய மண்டல]]ங்களில் ஒன்றான நாம் வாழும் இப்[[பூமி]]யில் இவற்றின் உதவியின்றி எந்தவொரு ஜீவராசியாலும் உயிர் வாழமுடியாது. உதாரணத்திற்கு நம் உடலை எடுத்துக்கொள்வோம்: [[இரத்தம்|இரத்த]]ச் சுற்றோட்டத்திற்கும் கலங்கள் இயங்குவதற்கும் [[நீர்|நீரு]]ம், தாது [[உப்பு]]க்களுக்கு நிலமும், உடல் வெப்பத்தைப் பாதுகாக்க [[நெருப்பு]]ம், சுவாசிப்பதற்கு வசதியாகக் [[காற்று]]ம், காந்தகதிருக்கு ஆகாயமும் உறுதுணையாய் நிற்கின்றன.
 
[[நெல்]] வளர இவ்வைந்து பூதங்களும் உதவுகின்றன. நெல்லைக் குற்றி [[அரிசி]]யும் [[தவிடு]]ம் எடுக்கிறோம். இவற்றை நாம் உண்ணும்போது அவற்றிலுள்ள தாது உப்புக்களும், அரிய பூதியங்களும் மற்றும் ஜீவசத்துக்களும் எமதுடலை சென்றடைகின்றன. இதே போன்றே ஐம்பூதங்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நாமுயிர் வாழ்வதற்கு ஏற்ற துணையாய் நிற்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ஐம்பூதங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது