தச்சர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+eo
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி விக்கி இணைப்பு
வரிசை 2:
மரவேலை (அல்லது தச்சு வேலை) செய்யும் ஒருவரைத் தமிழில் '''தச்சன்''' எனக் குறிப்பிடுவர். [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]], [[சாதி]]கள் [[தொழில்]] அடிப்படையில் அமைந்திருப்பதால், தச்சர் (தச்சன் என்பதன் [[பன்மை]]ச் சொல்) என்பது மரவேலையாளர் சாதியையும் குறிக்கும். முற்காலத் தமிழகத்திலும், [[தமிழர்]] வாழும் [[இலங்கை]] போன்ற இடங்களிலும், மரவேலை மேற்படி சாதியாருக்கு மட்டுமே உரியதாக இருந்தது. தற்காலத்தில் இது பெருமளவு மாறிவிட்டதெனலாம்.
 
கற்களில் [[சிற்பம்|சிற்பங்கள்]] செய்யும் [[சிற்பி]]களும் சில பண்டைய [[நூல்]]களில் கற் தச்சர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஆபரணத் தொழில் செய்யும் [[தட்டார்]], உலோகத் தொழில் செய்யும் [[கன்னார்]], [[இரும்பு]]த் தொழிலில் ஈடுபடுகின்ற [[கொல்லர்]],மட்பாண்டத் தொழில் செய்யும் [[குயவர்]] என்னும் கைவினைத் தொழில் செய்யும் சாதியாருடன் தச்சரையும் சேர்த்துப் பஞ்ச கம்மாளர் எனவும் அழைப்பதுண்டு.
 
முற்காலத்தில் [[வீடு]]கள் போன்ற [[கட்டிடம்|கட்டிடங்களை]]க் கட்டும்போது, தச்சரின் பங்கே முதன்மையாகக் கருதப்பட்டது. இன்றும் கூட இது தொடர்பான [[பாரம்பரியம்|பாரம்பரிய]]ச் [[சடங்கு]]களில் தச்சருக்கு முதன்மை கொடுக்கப்படுவதைக் காணமுடியும்.
"https://ta.wikipedia.org/wiki/தச்சர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது