நிறை மாற்றவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''நிறை மாற்றவியல்''' (Mass Transfer) என்பது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நிறையை மாற்றும் அல்லது செலுத்தும் நிகழ்வைக் குறிப்பதாகும். மாறும் நிறையானது முழுப்பொருளாக ஓடையாகவோ, வாகையாகவோ, அல்லது சில பின்னங்களாகவோ இருக்கலாம். [[உறிஞ்சல்உட்கவர்தல்]], [[ஆவியாதல்]], [[காய்தல்]], [[சவ்வின்வழி வடிகட்டல்]], [[சவ்வூடு பரவல்]], [[வடித்திறக்கல்]] போன்ற பல வேதிச் செயல்முறைகளில் நிறைமாற்றத்தைக் காணலாம்.
 
ஒரு குளத்தில் இருந்து ஆவியாகும் நீர்; சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றில் தூய்விக்கப்படும் குருதி; போன்றவை அன்றாட நிகழ்வுகளில் காணப்படும் சில நிறை மாற்றச் செயல்கள். தொழிலகங்களில் காணப்படும் நிறை மாற்றச் செயல்களுள் சில: வடித்திறக்கல் கோபுரங்களில் வேதிப் பொருட்களை அவற்றின் கொதிநிலை வேறுபாடுகளை வைத்துப் பிரித்தல், உட்கவர் கோபுரங்களில் நிகழும் மாற்றங்கள், போன்றவை. குளிர்விக்கும் கோபுரங்களில் சுடு நீரைக் குளிர்ந்த காற்றினைக் கொண்டு குளிர வைக்கும் செயல்முறையில் நிறை மாற்றமும் வெப்ப மாற்றமும் சேர்ந்தே காணப்படும்.
 
[[பகுப்பு:வேதிப் பொறியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/நிறை_மாற்றவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது