வாழைச்சேனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 19:
 
'''வாழைச்சேனை''' (''Valaichchenai'') [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரம். [[மட்டக்களப்பு]] நகரில் இருந்து 32 கிமீ தூரத்தில் உள்ளது. [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலில்]] புகழ் பெற்ற [[பாசிக்குடா]] கடற்கரை வாழைச்சேனை நகரில் இருந்து 3 கிமீ கிழக்கே அமைந்துள்ளது.
 
கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள வாழைச்சேனை மிக முக்கிய நகரங்களில் ஒன்று. இந்நகரம் மட்டக்களப்பிற்கு வடக்கே முப்பது கிலோமீட்டர் தொலைவிலும் பொலன்னறுவைக்குக் கிழக்கே எழுபது கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. வாழைச்சேனைக்கூடாகச் செல்லும் புகையிரதப் பாதையும் ஏ-15 பிரதான வீதியும் கிழக்கிலங்கையை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைப்பதனால் இந்நகரம் கேந்திர முக்கியத்துவமானதாகத் திகழ்கின்றது.
 
வாழைச்சேனையின் மேற்கிலிருந்து வடக்கு எல்லையாக, வாழைச்சேனை ஆறு எனப் பெயர்பெற்ற மதுறுஓயாவின் வடிச்சல் செல்கிறது. வாழைச்சேனை ஆறு கிழக்கிலே பாசிக்குடாவின் வடக்கு முனையில் வங்காள விரிகடலுடன் இணைகின்றது. தெற்கில் ஓட்டமாவடி எனும் முஸ்லிம் நகரம் உள்ளது. வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதான வீதி இவ்வூரை இரண்டாகப் பிரிக்கின்றது. வாழைச்சேனை கிழக்கில் தமிழரும் மேற்குப் பிரதேசம் முழுவதும் முஸ்லிம்களும் வாழ்கின்றனர். வாழைச்சேனையின் கிழக்கு எல்லையாகப் பேத்தாழைக் கிராமம் உள்ளது.
 
வாழைச்சேனை நகரில் பெரும்பான்மையாக வாழ்வோர் முஸ்லிம்களாவர். இந்நகரின் பிரதான சந்தையும் கடைகளும் வாழைச்சேனை ஜும்ஆப் பள்ளிவாயல் பரிபாலனத்தின் கீழேயே செயற்படுகின்றன. இங்கு முன்னர் அமைந்திருந்த பிரதேச சபை கட்டிடம், கிராமக் கோடு என்பன இப்பள்ளிவாசல் தர்மகர்த்தாக்களாலேயே அரசுக்கு வழங்கப்பட்டன.
 
வாழைச்சேனை ஆற்றுடன் இணைந்து தற்போது அமைக்கப்பட்டுள்ள மீன்பிடித்துறைமுகம் ஒரு காலத்தில் பிரபல்யம் பெற்று விளங்கியது. தபாற்துறை அல்லது வங்களாத்துறை என அழைக்கப்பட்ட இவ்விடம் மட்டக்களப்பிற்கும் திருகோணமலைக்குமிடையிலான போக்குவரத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. பின்னர் ஆற்றின் மேற்குப் பகுதியில் அமைக்கப்பட்ட ஓட்டமாவடிப் பாலம் புகையிரத மோட்டார்ப் போக்குவரத்திற்கு வழியமைத்ததால் நீர்ப்போக்குவரத்தின் தேவை நின்றுவிட்டது. ஆயினும் இப்பகுதியின் தொழில்துறை வளர்ச்சியாலும் குறிப்பாக மீன்பிடி காரணமாகவும் இப்பகுதி வேகமாக வளர்ச்சியடைந்தது.
 
வாழைச்சேனையின் வெறுகல், வாகரை தொடக்கம் தெற்கிலுள்ள வந்தாறுமூலை வரை உள்ள மக்கள் அனைவரும் வாழைச்சேனையுடன் தொடர்புள்ளவர்களாகவே விளங்குகின்றனர். இவர்கள் தமக்குத் தேவையான பொருட்களை வாங்கவும் தமது உற்பத்திப் பொருட்களை விற்கவும் வாழைச்சேனை சந்தையைப் பயன்படுத்துகின்றனர். வாழைச்சேனை நகரம் கிழக்கிலங்கையில் தமிழ்-முஸ்லிம் ஒற்றுமைக்குப் பெயர்பெற்ற இடமாக விளங்குகின்றது.
 
 
குடியேற்றம்
 
வாழைச்சேனைப் பிரதேசத்தில் தமிழரும் முஸ்லிம்களும் வாழ்கின்றனர். இப்பிரதேசம் இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு காடடைந்த பிரதேசமாக இருந்தது. இங்கு கல்குடாத்துறையை ஒட்டிய பகுதியில் ஆதிக்குடிகளான வேடுவர் வசித்து வந்தனர். மலைநாட்டிலும் பிறபிரதேசங்களிலிருந்தும் குடிப்பெயர்ச்சிகள் இடம்பெற்ற போது முஸ்லிம்களும் தமிழர்களும் இங்கு குடியேறினர்.
 
ஆரம்பத்தில் வாழைச்சேனை ஆற்றின் தெற்குக் கரை முழுவதும் கிழக்கில் தற்போதுள்ள கருங்காலிச்சேலைக்குடாத் தொடக்கம் மேற்கு நோக்கி தைக்காப்பள்ளிவாசல்துறை வரை முஸ்லிம்களின் குடியிருப்புக்கள் பரவி வளர்ச்சியடைந்தன. முஸ்லிம்களின் முதற்குடியிருப்பு கிழக்கில் பாசிக்குடாவின் வடக்குமுனையில் கருங்காலிச்சோலைக்குடாவிலேயே நிகழ்ந்தது. இக்குடியிருப்பின் தென்பகுதியில் வேடுவ இன மக்களும் பின்னர் தமிழரும் குடியேறினர்.
 
கருங்காலிச்சோலைக்குடா மீன்பிடித் தொழிலுக்கும் பயிச்செய்கைக்கும் வசதியான ஓரிடமாகும். இங்கு குடியேறி முஸ்லிம்கள் இவ்விரு தொழில்களிலும் சிறப்பிடம் பெற்று விளங்கினர்.
 
வாழைச்சேனை ஆற்றின் மேற்குக்கரையோரமாக விளங்கிய மருங்கையடிப் பூவல் பிரதேசம், வடிச்சல் நிலமாகவும் பயிர்ச் செய்கைக்கு உகந்ததாகவும் விளங்கியதால் படிப்படியே முஸ்லிம்களின் குடியிருப்புகள் அப்பிரதேசத்தை நோக்கி நகரலாயிற்று. இங்கு குயிடியேறியோர் வாழைமரப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டனர். சேனைப் பயிர்ச்செய்கை என்ற வகையில் வாழைச்சேனையென இவ்விடம் பெயர் பெறலாயிற்று. வாழைமரங்களை பெருமளவு செய்கை பண்ணிய நிலச்சொந்தக்காரர் வாழைச்சேனையார் எனவும் பெயர் பெற்றனர்.
 
மருங்கையடிப்பூவல் என அழைக்கப்பட்ட இப்போதுள்ள வாழைச்சேனை நான்காம் வட்டாரப் பிரதேசமே ‘வாழைச்சேனை’ என்ற பெயருக்குரியதாய்த் திகழ்ந்தது. மருங்கைப்பூவல் என்ற பிரதேசத்தையொட்டி இருந்த, கசட்டையடி, நாவலடி, வெம்பு ஆகிய இடங்கள் பின்னர் வாழைச்சேனையுடன் இணைந்து பெயர் பெற்றன. நாவலடி, வெம்பு ஆகிய இடங்களில் நாவல் மரங்களும் காசான் பற்றைகளும் முந்திரிகை மரங்களும் நிறைந்து காணப்பட்டன. 1900 களுக்குப் பிறகே இப்பிரதேசம் மனித குடியிருப்புகளுக்கு ஏற்றனவாக மாற்றமடைந்தன.
 
ஆரம்பத்தில் ஓலைக்குடிசைகளும் ஒரு சில கல் வீடுகளுமே இருந்தன. இன்று காணப்படும் முன்னேற்றங்கள் கடந்த ஐம்பது வருடங்களுக்குள் ஏற்பட்டதே. மின்சாரம், வீதிகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் எல்லாம் ஐம்பது தொடக்கம் எழுதுபது ஆண்களில் ஏற்பட்ட வளர்ச்சியே.
 
வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீராவோடை ஆகிய இடங்களில் குடியேறிய முஸ்லிம்களின் வரலாறு காத்தான்குடி முஸ்லிம்களின் வரலாற்றுடனும் பெருமளவு மலைநாட்டு ராஜ்ஜியத்துடனும் தொடர்புபடுவதை வரலாற்றில் காண முடிகின்றது. காத்தான்குடியில் குடியேறியோரில் ஒரு பிரிவினரும் கண்டி, மன்னார் ஆகிய இடங்களில் குடியேற்றப்பட்ட ஒரு பிரிவினரும் கல்குடா தொகுதி பிரதேசங்களில் குடியமர்ந்தனர் எனக் கொள்ளலாம். வாழைச்சேனையின் குடிப்பரம்பல் அதிகரித்ததும் இப்பிரதேச மக்கள் அருகிலுள்ள பிற பகுதிகளில் குடியேறி விவசாயம், மீன்பிடி போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். இப்பிரதேசங்களும் பின்னர் தனித்தனி ஊர்களாக மாற்ற மடைந்தன. பிறைந்துறைச்சேனை, மாவடிச்சேனை, தியாவட்டவான், பாலை நகர், குறாத்தை, ஹிஜ்ரா நகர் (கேணிநகர்), மாங்கேணி, பனிச்சங்கேணி, கள்ளிச்சை, உன்னிச்சை, ஜெயந்தியாய, ரிதிதென்ன போன்ற பிரதேசங்களில் இப்பிரதேச மக்கள் பரந்து வாழ்கின்றனர்.
Isam Ihzam
 
== மக்கள் பரம்பல் ==
"https://ta.wikipedia.org/wiki/வாழைச்சேனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது