முகம்மது இப்னு சக்கரியா அல்-ராசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 60:
அல்ராஷி மருத்துவத்துறையில் மாத்திரமன்றி கணிதவியல், இரசாயனவியல், உளவியல், தத்துவவியல் போன்ற பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். இத்துறைகளில் இருநூற்று இருபதுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள் நூற்றிநாற்பது நூல்கள் மருத்துவம் பற்றியதாகும். அல்ஹாவி, அல்ஜூதரி வல் ஹஸ்பா, கிதாப் திப்பில் மன்சூர், கிதாபுல் அஸ்ரார் என்பன இவரது பிரசித்தம் பெற்ற நூல்களாகும்.
 
இருபது பாகங்களைக் கொண்ட மிகப் பெரிய மருத்துவ நூலான அல்ஹாவி நோய்களைப் பற்றியும், அவற்றுக்கான சிகிச்சை முறைகளைப் பற்றியும் விரிவாக ஆராய்கின்றது. இந்நூலின் பத்துப் பாகங்கள் இன்றும் கிடைக்கின்றன. கி.பி. 1279 ஆம் ஆண்டில் முதலாம் சார்ல்ஸ் மன்னனின் உத்தரவிற்கிணங்க இந்நூல் கொண்டினன்ஸ் (Continence) என்ற பெயரில் இலத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. பதினேழாம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் இது பாடநூலாக பயன்படுத்தப்பட்டதென்று ஐரோப்பிய ஆய்வாளர் ஜே.டி.பேர்ணாட் (J.D.Bernad) தனது "வரலாற்றில் விஞ்ஞானம்" என்ற நூலிலே குறிப்பிடுகின்றார். ஜேர்மனிய வரலாற்றாசிரியரான ஜோஸப் ஹெல் தனது "அரபு நாகரிகம்" என்ற நூலில் அல்ராஷி பத்துப்பாகங்களில் ஒரு மருத்துவ கலைக்களஞ்சியத்தையே உருவாக்கியுள்ளார் என்று பாராட்டியுள்ளார்.
 
அல்ஜூதரி வல் ஹஸ்பா (சின்னமுத்துவும் பெரியம்மையும்) என்னும் இவரது மற்றொரு நூல் அம்மை நோய்கள் பற்றி எழுதப்பட்ட முதல் ஆவணமாகக் கருதப்படுகின்றது. இந்நூல் பதினைந்தாம் நூற்றாண்டளவில் இலத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு, ஆங்கிலம், ஜேர்மன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
 
இவரது மற்றொரு நூலான "கிதாப் திப்பில் மன்சூர்" கிரேக்கம், பிரெஞ்சு போன்ற ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இத்தகைய மொழிபெயர்ப்பு முயற்சிகளே முஸ்லிம்களது மருத்துவ விஞ்ஞானம் ஐரோப்பாவுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்தது. இவரது மருத்துவ சாதனைகளை கெளரவப்படுத்தும் முகமாக இவரின் உருவப்படம் இன்று பாரிஸ் பல்கலைக்கழகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் பொது மருத்துவத்துறையில் மாத்திரமன்றி பிரயோக மருத்துவத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார். கண்மருத்துவம், சத்திரசிகிச்சைத்துறை ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருந்த இவர் சத்திரசிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் ஒருவித நூலிழையத்தை மிருகங்களின் குடலிலிருந்து கண்டுபிடித்தார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/முகம்மது_இப்னு_சக்கரியா_அல்-ராசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது