விண்மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
முகிழ்மீன் ஒரு நிலையான விண்மீனாவதற்கு அதன் இரு முக்கிய விசைகளும் சமன்பட வேண்டும். முகிழ்மீன் தன் சுய ஈர்ப்பு விசையால் சுருங்கத் தொடங்கும். முகிழ்மீனில் உள்ள [[ஐதரசன்]] அணுக்கள் இணைந்து [[ஈலியம்]] அணுக்களாக மாறும் போது பெருமளவு ஆற்றல் உண்டாகி முகிழ்மீன் விரிவடையவும் முயற்சிக்கும். சில கோடி ஆண்டுகளில் இரண்டு விசைகளும் சமமானவுடன் அளவில் பெருமளவு மாற்றம் ஏற்படாது. அதன் பிறகு விண்மீனின் அளவைப் பொருத்து எண்பது முதல் தொண்ணூறு சதவீதம் [[ஐதரசன்]] அணுக்கள் தீரும் வரை இதே அளவு நீடிக்கும். விசை சமன்பட்டதில் இருந்து இந்நிலையை அடையும் வரையே நிலையான விண்மீனாக இருக்க முடியும்.
 
=== தளர்ச்சியும் அழிவும் ===
=== தளர்ச்சி ===
விண்மீனின் அளவைப் பொருத்து எண்பது முதல் தொண்ணூறு சதவீதம் ஐதரசன் அணுக்கள் தீர்ந்த பிறகு விண்மீன் வீங்கும் ஆற்றல் குறைவதால் சுய ஈர்ப்பு விசையின் மூலம் சுருங்கும் ஆற்றல் அதிகரிக்கும். இவ்வாறு இது சுருங்கும் போது அந்த விண்மீனின் மொத்த எடையை பொருந்து அது பல்வேறு நிலைகளை அடைகிறது. அவை,
 
# [[சூரியன்]] அளவுக்கு எடையுள்ள விண்மீன்கள் சில கோடி வருடங்கள் [[சிவப்பு அரக்கன்|சிவப்பு அரக்கனாக]] இருந்து விட்டு பின்பு [[வெண் குறுமீன்|வெண் குறுமீனாக]] மாறிவிடும்.
# அதுவே [[சூரியன்]] அளவுக்கு எடையுள்ள விண்மீன் [[இரட்டை விண்மீன்]]களில் ஒன்றாக இருந்தால் அதில் [[குறுமீன் வெடிப்பு]] ஏற்பட்டு பிற்பாடு [[வெண் குறுமீன்|வெண் குறுமீனாக]] மாறிவிடும்.
# [[சூரியன்|சூரியனை]] விட இரண்டு அல்லது மூன்று மடங்கு எடையுள்ள விண்மீன்கள் [[கருங்குழி]]யாக மாறிவிடும்.
# [[சூரியன்|சூரியனை]] விட ஐந்தில் இருந்து எட்டு மடங்கு எடையுள்ள விண்மீன்கள் [[மீயொளிர் விண்மீன் வெடிப்பு|மீயொளிர் விண்மீன் வெடிப்பை]] நிகழ்த்திவிட்டு [[நொதுமி விண்மீன்|நொதுமி விண்மீனாக]] மாறிவிடும்.
# [[சூரியன்|சூரியனை]] விட பத்தில் இருந்து நாற்பது மடங்கு எடையுள்ள விண்மீன்கள் [[மீயொளிர் விண்மீன் வெடிப்பு|மீயொளிர் விண்மீன் வெடிப்பை]] நிகழ்த்திவிட்டு [[கருங்குழி]]யாக மாறிவிடும்.
 
[[பகுப்பு:விண்மீன்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/விண்மீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது