கோ. நம்மாழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
SriniG (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 1:
'''கோ. நம்மாழ்வார்''' ([[திருக்காட்டுப்பள்ளி]], [[தஞ்சை]], [[தமிழ்நாடு]]) தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை கற்றவர். கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார். பசுமைப் புரட்சி, நிலச்சீர்திருத்தம், தொழில்மயமாக்கம், சூழல் பாதுகாப்பு தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுக்களையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் [[இயற்கை வேளாண்மை|இயற்கை வழி வேளாண்மை]] முறைகளை ஊக்குவித்து வருபவர். குடும்பம் அமைப்பு<ref>[http://www.lurup.com/~agribi/Bildarkiv/Rapporter/SvalornaWEB.pdf], ILEIA </ref> உட்பட 250 மேற்பட்ட அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளரும் ஆவார்.
 
"தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்' என்ற அமைப்பினைத் தொடங்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் எல்லாவற்றையும் கால்நடையாக எட்டி, அங்கு கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருபவர். "பேரிகை' என்றொரு இயற்கை உழவாண்மை வாழ்வியல் மாத இதழை வெளியிடுகிறார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், இவருக்குச் "சுற்றுச் சூழல் சுடரொளி' விருதினை வழங்கியது.
"https://ta.wikipedia.org/wiki/கோ._நம்மாழ்வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது