சமூகவுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"திட்டமிடப்பட்ட பொருளாதார அமைப்பு"
வரிசை 31:
அனைத்து சமவுடமை நாடுகளிலும் பயன்படுத்தப் படும் முறை. குறிப்பாக இது சோவியத்து உருசியா உருவாக்கிய அமைப்பு. 1930களில் ஏற்பட்ட பெருமந்தமும் சோவியத்து உருசியாவின் எழுச்சியும் திட்டமிடுதலின் இன்றியமையாமையை உலகிற்கு உணர்த்தியது. அதன் பின்னர், 'பொருளாதாரத்தில் தலையிடா' கொள்கையை முன் வைக்கின்ற, முதலாளித்துவ நாடுகளும் கூட சிறிய அளவிலான திட்டமிடுதலைப் பயன்படுத்தத் தொடங்கின. திட்டமிடுதல் என்பது சோவியத்து உருசியா உலகிற்கு அளித்த பரிசாக புகழப்படுகிறது.
 
== சமவுடமை நாடுகள் ==
 
உலகின் பல்வேறு நாடுகள் பல்வேறு தருணங்களில் தங்களை சமவுடமை நாடுகளாக அடையாளப் படுத்திக் கொண்டுள்ளன.
இந்நாடுகளை இரு வகைகளாக பார்க்கலாம்
# மார்க்சிய-லெனினிய சமவுடமை நாடுகள்.
# பிற சமவுடமை நாடுகள்.
 
=== மார்க்சிய-லெனினிய சமவுடமை நாடுகள் ===
இவை ஒற்றை கட்சி மட்டுமே ஆட்சி செய்யக்கூடிய அமைப்பைக் கொண்ட சமவுடமை நாடுகள். பிற உலக நாடுகளால் இவை கம்யூனிச நாடுகள் என்று அழைக்கப் பட்டாலும், இவை தங்களை கம்யூனிச நிலையை நோக்கி பயணிக்கும் சமவுடமை அரசுகளாவே அடையாளப் படுத்துகின்றன.
 
(வளரும்)
 
=== பிற சமவுடமை நாடுகள் ===
இந்நாடுகள் மக்களாட்சி முறையிலான பல-கட்சி அமைப்பை கொண்டிருந்தாலும் தத்தம் அரசியலமைப்புகளில் தங்களை சமவுடமை அரசுகளாக அடையாளப் படுத்தி கொள்ளும் நாடுகள்.
 
(வளரும்)
 
{{பொருளாதார முறைகள்}}
"https://ta.wikipedia.org/wiki/சமூகவுடைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது